முகப்பு /செய்தி /இந்தியா / நாட்டின் மிகப் பெரிய மருத்துவமனையை தொடங்கிவைத்த பிரதமர் மோடி

நாட்டின் மிகப் பெரிய மருத்துவமனையை தொடங்கிவைத்த பிரதமர் மோடி

இந்தியாவின் மிகப் பெரிய மருத்துவமனையை திறந்து வைத்தார் பிரதமர் மோடி

இந்தியாவின் மிகப் பெரிய மருத்துவமனையை திறந்து வைத்தார் பிரதமர் மோடி

Amirta hospital: 2,600 படுக்கை வசதி கொண்ட இந்த மருத்துவமனைக்கு அமிர்தா மருத்துவமனை எனப் பெயரிடப்பட்டது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Faridabad, India

நாட்டின் மிகப் பெரிய பன்னோக்கு மருத்துவமனையை இன்று ஹரியானா மாநிலத்தில் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்தார். ஹரியானா மாநிலம் பரீதாபாத்தில் 130 ஏக்கர் பரப்பளவில் ஏழு அடுக்கு மாடி கொண்ட பிரம்மாண்ட மருத்துவமனையை மாதா அமிர்தானந்தமயி மடம் உருவாக்கியுள்ளது. சுமார் 2,600 படுக்கை வசதி கொண்ட இந்த மருத்துவமனைக்கு அமிர்தா மருத்துவமனை எனப் பெயரிடப்பட்டது.

மொத்தமுள்ள 2,600 படுக்கைகளில் 534 ஐசியூ பிரிவுக்கு பிரத்தியேகமாக ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனையின் கட்டுமான பணிகள்  2016ஆம் ஆண்டு தொடங்கியது. கோவிட் லாக்டவுன் காரணமாக கட்டுமான பணியில் சுணக்கம் ஏற்பட்ட நிலையில், தற்போது வெற்றிகரமாக கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

இந்த பன்னோக்கு மருத்துவமனையில் மிகச்சிறந்த நவீன தொழில்நுட்ப வசதியோடு கூடிய ஆராய்ச்சி மையமும் உள்ளது. இந்த மருத்துவமனையின் தொடக்க விழா இன்று நடைபெற்றது. பிரதமர் மோடி தலைமை தாங்கிய நிலையில், விழாவில் ஹரியானா ஆளுநர் பன்டாரு தத்தாத்ரேயா, மாநில முதலமைச்சர் மனோகர் லால் கட்டர், மாதா அமிர்தானந்தமயி ஆகியோர் பங்கேற்றனர்.

மருத்துவமனையைத் தொடங்கி வைத்து விழாவில் பேசிய பிரதமர் மோடி, "உலகமே மாத அமிர்தானந்தமயியை போற்றுகிறது. கடந்த பல ஆண்டுகளாக அவரின் அன்பும் ஆசியும் எனக்கு கிடைத்து வருவதை பாக்கியமாக கருதுகிறேன். நாட்டின் மீதும் மக்கள் மீதும் அவரின் அக்கறையை நான் உணர்ந்துள்ளேன். உடல்நலம் மற்றும் ஆன்மீகம் இரண்டையும் ஒன்றிணைத்து பார்க்கும் தன்மை இந்தியாவிடம் மட்டுமே உள்ளது. கோவிட் காலத்தில் ஆன்மீக தலைவர்கள் தடுப்பூசி திட்டத்திற்கு ஆதரவாக விழிப்புணர்வு ஏற்படுத்தியது இதற்கு சிறந்த உதாரணம்.

இதையும் படிங்க: மூளைச்சாவு அடைந்த 15 வயது சிறுமியின் உடல் உறுப்புகள் 6 பேருக்கு தானம் 

தொழில்நுட்பம் மற்றும் நவீனமயம் ஆகியவற்றின் கூட்டு முயற்சி மூலம் இந்தியா சுகாதாரத்துறையில் சிறப்பான இடத்தை அடையும்.நாட்டின் கல்வி மற்றும் சுகாதாரத்தை மேம்படுத்த அரசு மிகத் தீவிரமாக செயலாற்றி வருகிறது" எனத் தெரிவித்தார்.

First published:

Tags: Haryana, Hospital, PM Modi