Home /News /national /

நாட்டின் முதல் மத்திய - மாநில அறிவியல் மாநாட்டை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

நாட்டின் முதல் மத்திய - மாநில அறிவியல் மாநாட்டை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

மத்திய மாநில அறிவியல் மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

மத்திய மாநில அறிவியல் மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

நாட்டின் நீண்ட கால வளர்ச்சி திட்டம் குறித்து பல்வேறு அம்சங்கள் இந்த இரண்டு நாள் மாநாட்டில் விவாதிக்கப்படவுள்ளன.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Delhi, India
    நாட்டின் முதல் மத்திய - மாநில அறிவியல் மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். இந்த இரண்டு நாள் மாநாடு அகமதாபாதில் உள்ள அறிவியல் நகரில் இன்று மற்றும் நாளை நடைபெறுகிறது.

    நாட்டில் புதிய கண்டுபிடிப்பு மற்றும் தொழில்முனைவோருக்கு வசதி செய்து கொடுக்கும் பிரதமரின் இடைவிடாத முயற்சியில் முதல் முறையாக இத்தகைய மாநாடு நடைபெறுகிறது. நாடு முழுவதும் வலுவான அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புதிய கண்டுபிடிப்பு (எஸ்டிஐ) சூழலைக் கட்டமைக்க கூட்டாட்சி ஒத்துழைப்பு உணர்வுடன் மத்திய- மாநில ஒத்துழைப்பு நடைமுறையை இது வலுப்படுத்தும்.

    மாநாட்டை தொடங்கி வைத்து பிரதமர் மோடி பேசியதாவது, "21ஆம் நூற்றாண்டில் இந்தியாவின் அனைத்து மூளை முடுக்குகளிலும் விஞ்ஞான வளர்ச்சி சென்றடைய வேண்டும். இந்தியா தற்போது நான்காவது தொழில்புரட்சியை நோக்கி நடைபோடும் வேளையில், இதில் விஞ்ஞானத்தின் பங்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.நாட்டின் அறிவியல் துறை வளர்வதற்கு உயர் கல்வியின் தரத்தை மேம்படுத்துவது மிகவும் அவசியம். எனவே அனைத்து மாநிலங்களிலும் உயர் கல்வி நிறுவனங்களையும் அங்கு தரம் வாய்ந்த ஆராய்ச்சி மையங்களையும் உருவாக்க அரசு முனைப்புடன் உள்ளது.

    புதுமையான செயல்பாடுகளை ஊக்குவிப்பதில் மாநில அரசு உரிய கவனம் செலுத்த வேண்டும். சர்வதேச புதுமை கண்டுபிடிப்பு பட்டியலில் 2015ஆம் ஆண்டு இந்தியா 81ஆவது இடத்தில் இருந்தது. மத்திய அரசின் தொடர் முயற்சியால் தற்போது 45ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. மத்திய மாநில அரசு ஒருங்கிணைந்து நாட்டின் அறிவியல் வளர்ச்சியை சாத்தியப்படுத்த இந்த மாநாடு நிச்சயம் உதவும்" எனத் தெரிவித்தார்.

    இந்த தொடக்க விழாவில் குஜராத் முதலமைச்சர் பூபேந்தர படேல், மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    இதையும் படிங்க: மோசடி லோன் செயலிகளை கணக்கெடுக்கும் ரிசர்வ் வங்கி.. மோசடியை தடுக்க நிதியமைச்சகம் அதிரடி திட்டம்!

    நிகழ்வில் எஸ்டிஐ தொலைநோக்கு 2047, மாநிலங்களில் எஸ்டிஐ வளர்ச்சிக்கான பார்வை மற்றும் எதிர்கால வளர்ச்சிப்பாதைகள், சுகாதாரம் - அனைவருக்கும் டிஜிட்டல் சுகாதார வசதி, 2030-க்குள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் தனியார் துறை முதலீட்டை இருமடங்கு ஆக்குதல், வேளாண்மை – விவசாயிகளின் வருவாயை அதிகரிக்க தொழில்நுட்ப தலையீடுகள், தண்ணீர் – தூய்மையான குடிநீர், எரிசக்தி – ஹைட்ரஜன் இயக்கம், கடலோர மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுக்கும் நாட்டின் எதிர்கால பொருளாதாரத்திற்கும் பொருத்தமான ஆழ்கடல் இயக்கம் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் இந்த மாநாட்டின் அமர்வுகள் நடைபெறுகிறது.
    Published by:Kannan V
    First published:

    Tags: Gujarat, PM Modi, Science

    அடுத்த செய்தி