முகப்பு /செய்தி /இந்தியா / சென்னை - மைசூரு வந்தே பாரத் ரயில் சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

சென்னை - மைசூரு வந்தே பாரத் ரயில் சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

நாட்டின் 5ஆவது வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார்.

  • Last Updated :
  • Bangalore [Bangalore], India

சென்னை - மைசூரு இடையே நாட்டின் அதிவேக வந்தே பாரத் ரயிலை பிரதமர் நரேந்திர மோடி கொடி அசைத்து தொடங்கி வைத்தார். கர்நாடகா மாநிலம் பெங்களூருவுக்கு வருகை தந்துள்ள பிரதமர் மோடி, கேஎஸ்ஆர் பெங்களூரு ரயில் நிலையத்தில் இருந்த வந்தே பாரத் ரயிலை கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.இந்த நிகழ்வில் கர்நாடகா முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, மத்திய அமைச்சர்கள் தவார்சந்த் கெலாட், பிரகலாத் ஜோஷி, அஸ்வினி வைஷ்னவ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

வந்தே பாரத் ரயில் வரிசையில் இயங்கும் 5ஆவது ரயில் இதுவாகும். இந்த ரயில் சென்னை, பெங்களூரு, மைசூரு வழித்தடத்தில் புதன்கிழமை தவிர மற்ற நாள்களில் இயக்கப்படும். இதில் மொத்தம் 16 பெட்டிகளும் அதில் மொத்தம் 1,128 இருக்கைகளும் உள்ளன. சென்னையில் இருந்த மைசூரு செல்லும் வந்தே பாரத் ரயிலின் எண் 20607 என்றும் மைசூரில் இருந்து சென்னை செல்லும் ரயிலின் எண் 20608 என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: அடுத்த ஆண்டு முதல் முதுநிலை மருத்துவப்படிப்பு நீட் ரத்து?

சென்னையில் அதிகாலை 5.50 மணிக்கு புறப்படும் இந்த ரயில், ஜோலார்பேட்டை வழியாக பெங்களூருவுக்கு காலை 10.25க்கு செல்கிறது. அங்கு 5 நிமிடம் ஹால்ட் செய்யப்பட்டு, பின்னர் அங்கிருந்து புறப்பட்டு 12.30 மணிக்கு மைசூரு வந்தடைகிறது.

பிரதமர் மோடி இதற்கு முன்னர் நாட்டில் 4 வந்தே பாரத் ரயில் திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார். முதலாவதாக டெல்லி - வாரணாசி வந்தே பாரத் ரயில், இரண்டாவதாக டெல்லி - ஸ்ரீவைஷ்னவ் தேவி கோயில் வந்தே பாரத் ரயில், மூன்றாவதாக காந்தி நகர் - மும்பை வந்தே பாரத் ரயில், நான்காவதாக டெல்லி - அம் அந்தௌரா வந்தே பாரத் ரயில் திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன.

First published:

Tags: Bangalore, PM Modi, Vande Bharat