முகப்பு /செய்தி /இந்தியா / எந்த சவால் வந்தாலும் இந்தியா தீர்க்கமான முடிவுகளால் எதிர்கொள்கிறது.. பிரதமர் மோடி பெருமிதம்

எந்த சவால் வந்தாலும் இந்தியா தீர்க்கமான முடிவுகளால் எதிர்கொள்கிறது.. பிரதமர் மோடி பெருமிதம்

கர்நாடகாவில் பிரதமர் மோடி

கர்நாடகாவில் பிரதமர் மோடி

எந்த சவால் வந்தாலும் அதை தீர்க்கமான முடிவுகளால் இந்தியா எதிர்கொள்வதாக பிரதமர் மோடி பெருமிதத்துடன் கூறியுள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Karnataka, India

விரைவில் தேர்தல் நடைபெறவுள்ள கர்நாடக மாநிலத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி வருகை தந்தார். விமான நிலையத்தில் பிரதமர் மோடியை மாநில முதலமைச்சர் பசவராஜ் பொம்மை வரவேற்றார். பின்னர் பெங்களூருவில் இந்திய ஆற்றல் வாரவிழாவை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

இந்தியன் ஆயில் நிறுவனம் உற்பத்தி செய்துள்ள புதிய சோலார் அடுப்புகளை பிரதமர் மோடி அறிமுகப்படுத்தி வைத்தார். பின்னர் மேடையில் பேசிய பிரதமர் மோடி, 21ம் நூற்றாண்டில் உலகின் எதிர்காலத்தை தீர்மானிப்பதில் ஆற்றல் துறை மிகமுக்கிய பங்கு வகிக்கிறது என்றார். ஆற்றல் உற்பத்தியின் ஆதாரத்தை தேடுவதிலும், ஆற்றல் பகிர்விலும் இந்தியா வலுவாக உள்ளதாகவும் கூறியுள்ளார்.

சர்வதேச நாணய நிதிய கணிப்பின்படி உலகிலேயே இந்தியா தான் வேகமாக வளரும் பொருளாதார நாடு என்றும் , பெருந்தொற்று மற்றும் ரஷ்யா உக்ரைன் போர் சமயங்களில் கூட உலகளவில் இந்தியா பிரகாசமான இடத்தில் இருந்ததாகவும் மோடி கூறியுள்ளார். இந்தியா சவால்களை எதிர்கொள்ள என்ன காரணம் என்று மூன்று காரணிகளை மோடி சுட்டிக்காட்டினார்.

நிலையான, முடிவை தீர்க்கமாக எடுக்கும் அரசாங்கமாக உள்ளதும், பல்வேறு சீர்திருத்தங்கள் , சமூகம் மற்றும் பொருளாதாரத்தை அடிமட்டத்தில் இருந்து வலுப்படுத்துவதும் முக்கிய காரணிகளாக மோடி பட்டியலிட்டுள்ளார். பின்னர் மின்சார இருசக்கர வாகன பேரணியையும் மோடி தொடங்கி வைத்தார். அத்துடன் துமகுருவில் உள்ள ஹெச்ஏஎல் ஹெலிகாப்டர் தொழிற்சாலையை நாட்டுக்கு பிரதமர் அர்ப்பணித்தார். மேலும், தும்குரு தொழிற்பேட்டை மற்றும் தும்குருவில் இரண்டு ஜல் ஜீவன் மிஷன் திட்டங்களுக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டினார்.

First published:

Tags: Karnataka, PM Modi