முகப்பு /செய்தி /இந்தியா / ரூ.640 கோடி மதிப்பில் பசுமை விமான நிலையம் - அருணாசலப் பிரதேசத்தில் திறந்து வைத்தார் பிரதமர் மோடி

ரூ.640 கோடி மதிப்பில் பசுமை விமான நிலையம் - அருணாசலப் பிரதேசத்தில் திறந்து வைத்தார் பிரதமர் மோடி

அருணாசலப் பிரதேசத்தில் பிரதமர் மோடி

அருணாசலப் பிரதேசத்தில் பிரதமர் மோடி

ரூ.640 கோடி மதிப்பில் பசுமை விமான நிலையத்தை பிரதமர் மோடி அருணாசலப் பிரதேசத்தில் திறந்து வைத்துள்ளார்.

  • Last Updated :
  • Arunachal Pradesh, India

ஜி 20 உச்சி மாநாட்டில் பங்கேற்றப் பின்னர் நேற்று நாடு திரும்பிய பிரதமர் நரேந்திர மோடி இன்று வடகிழக்கு மாநிலமான அருணாசலப் பிரதேசத்திற்கு சென்றுள்ளார். அங்கு பல்வேறு முக்கிய நலத்திட்டப் பணிகளை தொடங்கி வைத்துள்ளார். தலைநகர் இடாநகருக்கு விமானம் மூலம் வந்த பிரதமர் நரேந்திர மோடியை ஆளுநர் பிடி மிஸ்ரா, முதலமைச்சர் பெமா கண்டு உள்ளிட்டோர் வரவேற்றனர்.

பின்னர் விழா மேடைக்குச் சென்ற பிரதமர் மோடி, வடகிழக்கு பகுதிகளில் போக்குவரத்தை மேம்படுத்தும் முக்கிய நடவடிக்கையாக அருணாச்சலப்பிரதேசத்தின் இட்டாநகரில் முதலாவது பசுமை விமான நிலையமான டோன்யி போலோ விமான நிலையத்தை பிரதமர் திறந்து வைக்க உள்ளார். அருணாச்சலப் பிரதேசத்தில் பழங்கால வழிபாட்டு முறையான சூரியன் (டோன்யி) சந்திரன் (போலோ) ஆகியவற்றை விமானநிலையத்தின் பெயர் பிரதிபலிக்கிறது.

அருணாச்சலப் பிரதேசத்தின் முதலாவது பசுமை விமான நிலையமான இது, 690 ஏக்கருக்கும் அதிக பரப்பளவில் ரூ.640 கோடி அதிக செலவில் மேற்பட்ட செலவில் கட்டப்பட்டுள்ளது. 2,300 மீட்டர் நீள ஓடுபாதையுடன் அனைத்து பருவநிலை சூழல்களிலும் விமான நிலையம் இயங்க முடியும்.

நவீன கட்டிடத்துடன் அமைக்கப்பட்டுள்ள விமான நிலைய முனையம் எரிசக்தி திறன், புதுப்பிக்கவல்ல எரிசக்தி, வளங்களை மறுசுழற்சி செய்தல் ஆகியவற்றை மேம்படுத்தும். இந்த புதிய விமான நிலையம் வட கிழக்கு பிராந்தியத்தின் போக்குவரத்தை வளர்ச்சியடைய செய்வதோடு மட்டுமல்லாமல் வர்த்தக மற்றும் சுற்றுலாவையும் வளர்ச்சியடைய செய்யும்.  "நாடு சுதந்திரம் அடைந்து முதல் 70 ஆண்டுகளில் வடகிழக்கு மாநிலங்களில் வெறும் 9 விமான நிலையங்கள்தான் கட்டப்பட்டது. அதேவேளை, நான் பிரதமராக பொறுப்பேற்று இயங்கி வரும் கடந்த 8 ஆண்டுகளில் 7 புதிய விமான நிலையங்களை உருவாக்கியுள்ளோம்" என பிரதமர் மோடி பெருமிதத்துடன் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: சாவர்கர் மீதான விமர்சனம் - ராகுல் காந்தி மீது அவதூறு வழக்கு பதிவு

top videos

    இதை தொடர்ந்து 600 மெகாவாட் உற்பத்தி திறன் காமெங் நீர்மின் உற்பத்தி நிலையத்தையும் பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார். அருணாச்சலப்பிரதேசத்தின் மேற்கு காமெங் மாவட்டத்தில் 80 கி.மீ. சுற்றளவில் ரூ.8,450 கோடி ரூபாய் செலவில் இந்த மின் உற்பத்தி நிலையம் உருவாக்கப்பட்டுள்ளது.பசுமை எரிசக்தி பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கில் இந்த மின் திட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது.

    First published:

    Tags: Arunachal Pradesh, PM Modi