முகப்பு /செய்தி /இந்தியா / வேட்டி சட்டையுடன் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் மோடி

வேட்டி சட்டையுடன் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் மோடி

பிரதமர் மோடி

பிரதமர் மோடி

KasiTamilSangamam : காசிக்கும், தமிழ்நாட்டுக்கும் இடையே பல நூற்றாண்டு கால பழமையான நாகரிக தொடர்பை மீண்டும் உயிர்ப்பிக்கும் வகையில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

காசியில் நடைபெற்ற காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை வேட்டி சட்டையுடன் பிரதமர் மோடி பங்கேற்று தொடங்கி வைத்தார்.

நாடு சுதந்திரம் அடைந்ததன் 75வது ஆண்டு விழாவை கொண்டாடும் விதமாக மத்திய அரசு சார்பில் நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. இதன் ஒருபகுதியாக ஒரே பாரதம், உன்னத பாரதம் என்ற உணர்வுடன், தமிழ் மொழியையும் கலாச்சாரத்தையும் முன்னிலைப்படுத்தும் வகையில் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி, நடைபெறுகிறது.

இந்நிகழ்ச்சி கடந்த வியாழக்கிழமை தொடங்கிய நிலையில், பனாரஸ் பல்கலைக்கழக வளாகத்தில் இன்று முறைப்படி பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.இந்நிகழ்ச்சியில் மத்திய கலாச்சாரத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டி, இணையமைச்சர் எல்.முருகன், உத்தரபிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், இசையமைப்பாளர் இளையராஜா, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் காசி தமிழ் சங்கமம் விழாவில் பிரதமர் மோடி தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி சட்டையுடன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். மேலும் 13 மொழிகளில் திருக்குறள் மொழி பெயர்ப்பு நூல் வெளியிட்டு பிரதமர் மோடி வெளியிட்டார்.

இதையும் படிங்க: ரூ.640 கோடி மதிப்பில் பசுமை விமான நிலையம் - அருணாசலப் பிரதேசத்தில் திறந்து வைத்தார் பிரதமர் மோடி

காசிக்கும், தமிழ்நாட்டுக்கும் இடையே பல நூற்றாண்டு கால பழமையான நாகரிக தொடர்பை மீண்டும் உயிர்ப்பிக்கும் வகையில், கருத்தரங்குகள், கல்வி சார்ந்த உரையாடல்கள் மற்றும் விவாதங்கள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

First published:

Tags: PM Modi, Tamil language, Varanasi