ஹோம் /நியூஸ் /இந்தியா /

யோகி துணையுடன் வாரணாசியில் நள்ளிரவில் ஆய்வு மேற்கொண்ட பிரதமர் மோடி

யோகி துணையுடன் வாரணாசியில் நள்ளிரவில் ஆய்வு மேற்கொண்ட பிரதமர் மோடி

Narendra modi

Narendra modi

வாரணாசி நகரின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் வளர்ச்சித் திட்ட பணிகளை பார்வையிட்டு அது குறித்த விவரங்களை அறிந்து கொண்ட பிரதமர் மோடி, பனாரஸ் ரயில்நிலையத்துக்கு சென்றும் பார்வையிட்டார்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  339 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான காசி விஸ்வநாதர் கோவில் வளாக திட்டத்தை நேற்று திறந்து வைத்த பிரதமர் மோடி நள்ளிரவில் வாரணாசி நகரில் ஆய்வு மேற்கொண்டார்.

  உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் கங்கை நதிக்கரையில் அமைந்துள்ள காசி விஸ்வநாதர் கோவிலை கூடுதல் வசதிகளுடன் 339 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தும் பணிகள் நிறைவு செய்யப்பட்ட நிலையில் நேற்று (டிச 13) பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு இதனை அர்ப்பணித்தார்.

  ஒவ்வொரு ஆண்டும் பல லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தரும் இந்த ஆலயத்தை சென்றடைய குறுகிய தெருக்களையும், கடைவீதிகளையும் கடந்து செல்வது சிரமத்துக்குரியதாக இருந்தது. மேலும் ஆலய வளாகம் 3,000 சதுர அடியில் சிறிய அளவில் இருந்ததால் மக்கள் நெருக்கடி அதிகமானதாக இருந்து வந்தது. இந்த ஆலய வளாகத்தை பல்வேறு சிறப்புக்களுடன், விரிவாக்க திட்டமிடப்பட்டது. வாரனாசி தொகுதியின் எம்.பியான பிரதமர் மோடியின் கனவுத் திட்டமாகவே இது பார்க்கப்பட்டது.

  இதன் மூலம் 3,000 சதுர அடி பரப்பிலான காசி விஸ்வநாதர் ஆலயம், 5 லட்சம் சதுர அடியில் மேம்படுத்தப்பட்டுள்ளது.

  காசி விஸ்வநாதர் ஆலய வளாகத்தை திறந்து வைத்த பிரதமர் மோடி, அங்கு தீப ஆராதனை செய்து வழிபாட்டில் ஈடுபட்டார். இதனையடுத்து மாலை கங்கை நதியில் புனித நீராடி அங்கு நடைபெற்ற ஆரத்தி நிகழ்ச்சியிலும் அவர் கலந்து கொண்டார். முன்னதாக ஆலய கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களுடன் பிரதமர் மோடி ஒன்றாக அமர்ந்து உணவருந்தினார். வாரணாசி மக்களிடம் பிரதமர் மோடி உரையாடினார்.

  இதனையடுத்து பாஜக ஆளும் மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். இதன் பின்னர் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துடன் இணைந்து நள்ளிரவில் பிரதமர் மோடி திடீர் ஆய்வு நடத்தினார். வாரணாசி நகரின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் வளர்ச்சித் திட்ட பணிகளை பார்வையிட்டு அது குறித்த விவரங்களை அறிந்து கொண்ட பிரதமர் மோடி, பனாரஸ் ரயில்நிலையத்துக்கு சென்றும் பார்வையிட்டார். பிரதமர் மோடி நள்ளிரவில் ஆய்வு மேற்கொண்டது பரபரப்பாக பேசப்படுகிறது.

  Published by:Arun
  First published:

  Tags: Narendra Modi, Varanasi, Yogi adityanath