’பயமா... எனக்கா...’- பியர் க்ரில்ஸ் உடன் பிரதமர் மோடியின் சாகச காட்டுப் பயணம்!

Man vs Wild | அமெரிக்காவின் அதிபராக பராக் ஒபாமா இருந்தபோது க்ரில்ஸ் உடன் அவர் மேற்கொண்ட பயணம் வெகுவான கவனம் ஈர்த்தது.

’பயமா... எனக்கா...’- பியர் க்ரில்ஸ் உடன் பிரதமர் மோடியின் சாகச காட்டுப் பயணம்!
பியர் க்ரில்ஸ் உடன் பிரதமர் மோடி
  • News18
  • Last Updated: August 13, 2019, 11:30 AM IST
  • Share this:
டிஸ்கவரி சேனலில் நேற்று இரவு பிரதமர் மோடி பங்கேற்ற பியர் க்ரில்ஸின் ‘மேன் Vs வைல்ட்’ நிகழ்ச்சி ஒளிபரப்பானது.

உத்தராகண்ட் மாநிலத்தில் ஜிம் கார்பெட் தேசிய வனவிலங்கு பூங்காவின் காட்டுப் பகுதிகளில் பியர் க்ரில்ஸ் உடன் இணைந்து பிரதமர் மோடி சவாலான ஒரு காட்டுப் பயணத்தை மேற்கொண்டார். மழையிலும் குளிரிலும் காட்டின் அடர்த்தியிலும் தைரியமாகப் பயணித்த மோடியின் ‘ஸ்போர்ட்டி’ ஆன செயல்பாடுகள் தன்னைக் கவர்ந்ததாக நிகழ்ச்சித் தொகுப்பாளர் பியர் க்ரில்ஸ் தெரிவித்துள்ளார்.

காட்டுப் பயணத்தின் ஊடே பிரதமர் மோடியிடம் நட்பு ரீதியாகப் பல கேள்விகளைக் கேட்டுக்கொண்டே வந்தார் பியர் க்ரில்ஸ். பிரதமர் மோடியின் குழந்தைப் பருவம் முதல் அரசியல் பதவிகள் வரையில் பல கேள்விகளை பியர் க்ரில்ஸ் கேட்டார். அவற்றுக்குப் பதிலளித்த மோடி, “மக்களுக்காகப் பணியாற்றி அவர்களின் ஆசையை நிறைவேற்றுவது என்பதுதான் எனக்கு மகிழ்ச்சியான செயல். நாட்டின் வளர்ச்சியின் மீதே கவனம் உள்ளது. பதவி என்ற எண்ணத்தை எப்போதும் என் தலையில் ஏற்றிக்கொள்ளமாட்டேன்” என்றார்.


பியர் க்ரில்ஸ் இதற்கு முன்னர் பல உலகப் பிரபலங்களுடன் இதுபோன்ற காட்டுப் பயணங்களை மேற்கொண்டுள்ளார். அதில், அமெரிக்காவின் அதிபராக பராக் ஒபாமா இருந்தபோது க்ரில்ஸ் உடன் அவர் மேற்கொண்ட பயணம் வெகுவான கவனம் ஈர்த்தது. மோடியின் பயம் குறித்த க்ரில்ஸின் கேள்விக்கு, “என்னுடைய பிரச்னை என்னவென்றால் இதுவரையில் நான் பயம் என்ற ஒன்றை அனுபவிக்கவில்லை. எப்போதும் பாஸிட்டிவ் ஆக இருப்பதால் பயம் என்னைத் தாக்கியதும் இல்லை அனுபவித்ததும் இல்லை.

இன்றைய இளைஞர்கள் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். வாழ்க்கை மேடும் பள்ளமும் நிறைந்தது. கீழே விழுந்தால் தளராதீர்கள். அங்கிருந்துதான் மேல் எழ முடியும் என நம்புங்கள். இந்த உலகை நான் ஒரே குடும்பமாகவே பார்க்கிறேன். உங்களுடனான இந்தப் பயணம்தான் கடந்த 18 ஆண்டுகளில் நான் கொண்டாடிய முதல் விடுமுறை ஆகும்” என்றார்.

இடையே பியர் க்ரில்ஸ் புலிகள் நடமாட்டம் குறித்து மோடியை எச்சரித்தபோது, “நாம் எப்போதும் இயற்கையைக் கண்டு பயப்படவே கூடாது. அனைத்தையும் கடவுள் பார்த்துக்கொள்வார். நாம் இயற்கையுடன் போரிட்டால் மட்டுமே இயற்கை திருப்பித் தாக்கும்” என்றார்.மேலும் பார்க்க: பிரதமர் மோடியின் சாகசப் பயண நிகழ்ச்சிப் புகைப்படங்கள்!
First published: August 13, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்