Home /News /national /

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்திற்கு பிரிவு உபசார விழா நடத்திய பிரதமர் மோடி.. பழங்குடியினத்தவருக்கு சிறப்பு அழைப்பு

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்திற்கு பிரிவு உபசார விழா நடத்திய பிரதமர் மோடி.. பழங்குடியினத்தவருக்கு சிறப்பு அழைப்பு

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்திற்கு பிரிவு உபசார விழா

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்திற்கு பிரிவு உபசார விழா

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்துக்கு பிரதமர் மோடி அளித்த விருந்தில் அரசியல் பிரமுகர்கள் மட்டுமல்லாது, பத்ம விருது பெற்றவர்கள் மற்றும் பழங்குடியின தலைவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

    ராம்நாத் கோவிந்த் பதவிக்காலம் நாளையுடன் நிறைவடைகிறது. இதையடுத்து அவருக்கு பிரிவு உபசார விழா நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பிரதமர் மோடி, ராம்நாத் கோவிந்துக்கு விருந்து அளித்தார். இதில் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்,காங்கிரஸ் மக்களவை கட்சி தலைவர் அதிர் ரஞ்சன் சவுத்ரி, எதிர்க்கட்சி எம்.பிக்கள், பத்ம விருது பெற்றவர்கள் மற்றும் பழங்குடியின தலைவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

    இதில் பல்வேறு மாநில அரசியல் தலைவர்களும் பங்கேற்றதாகக் கூறப்படுகிறது. இந்த பிரிவு உபசார விழாவில் தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றனர்.  பொதுவாக அரசியல் தலைவர்கள், பிரமுகர்கள் ஆகியோர் மட்டுமே இது போன்ற விழாக்களில் அழைக்கப்படும் நிலையில், புதுவிதமாக பத்ம விருது வென்றவர்கள், பழங்குடி சமூகத்தை சேர்ந்தவர்கள் ஆகியோர் அழைக்கப்பட்டிருந்தது கவனத்தை பெற்றது.  அடிமட்டத்தில் இருந்து எழுந்து வந்து சாதனை படைத்தவர்கள் இந்த விழாவிற்கு வந்தது மகிழ்ச்சி அளிப்பதாக பிரதமர் மோடி விழா புகைப்படங்களை ட்விட்டரில் பகிர்ந்து பதிவிட்டுள்ளார்.


    2017ஆம் ஆண்டு ஜூலை 25ஆம் தேதி குடியரசுத் தலைவராக ராம்நாத் கோவிந்த் பதவியேற்றார். தனது பதவிக்காலத்தில் 33 நாடுகளுக்கு சுற்றுப் பயணம் செய்து நாட்டின் முதல் குடிமகனாக இந்தியாவை பிரதிநிதித்துவம் செய்து உலக அரங்கில் இந்தியாவின் உறவை வலிமைப்படுத்தியதாகக் குடியரசுத் தலைவர் அலுவலகம் தெரிவித்துள்ளது. நாளையுடன் குடியரசுத் தலைவர் மாளிகையில் இருந்து ராம்நாத் கோவிந்த் விடைபெறுகிறார்.

    இதையும் படிங்க: திரௌபதி முர்முவுக்கு ஆதரவாக அணி மாறி வாக்களித்த 120 எம்எல்ஏக்கள், 17 எம்பிக்கள்!

    அண்மையில் நடந்து முடிந்த குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற திரௌபதி முர்மு புதிய குடியரசுத் தலைவராக நாளை மறுதினம் பதவியேற்க உள்ளார்.
    Published by:Kannan V
    First published:

    Tags: PM Modi, President Droupadi Murmu, President Ramnath Govind

    அடுத்த செய்தி