மார்ச்-7ல் தேர்தல் தேதி அறிவிப்பு? பிரதமர் நரேந்திர மோடி சூசகம்

பிரதமர் நரேந்திர மோடி

தேர்தல் ஆணையம் தமிழகம் உள்ளிட்ட 5 மாநில தேர்தல் தேதியை மார்ச் 7- ஆம் தேதி அறிவிக்க வாய்ப்புள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி சூசகமாகத் தெரிவித்திருக்கிறார்.

 • Share this:
  அசாம் சட்டப்பேரவைக்கு ஏப்ரல், மே மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், அசாம் மாநிலத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி 3,222 கோடியில் உருவாக்கப்பட்டுள்ள பெட்ரோலிய திட்டங்களை நாட்டிற்கு அர்ப்பணித்ததுடன் இரண்டு பொறியியல் கல்லூரிகளுக்கு அடிக்கல் நாட்டினார். அதன்பிறகு பிரமாண்டமாக நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய அவர், உஜ்வாலா திட்டத்தின்கீழ் அனைத்து வீடுகளுக்கும் எரிவாயு இணைப்பு வழங்கப்பட்டிருப்பதாக பெருமிதம் தெரிவித்தார்.

  2016-ம் ஆண்டில் சட்டமன்ற தேர்தலுக்கான தேதியை மார்ச் 4ல் தேர்தல் ஆணையம் வெளியிட்டதாகவும் தற்போது மார்ச் 7-ம் தேதி தேர்தல் தேதி அறிவிக்க வாய்ப்பிருப்பதாகவும் பிரதமர் சூசகமாகத் தெரிவித்தார். அதற்கு முன்னதாக அசாம், மேற்குவங்கம், புதுச்சேரி, தமிழ்நாடு, கேரள மாநிலங்களுக்கு முடிந்த அளவுக்கு அதிகபட்சமாக சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாகவும் கூறினார்.

  அதைத்தொடர்ந்து மேற்கு வங்க மாநிலத்திற்கு சென்ற பிரதமர் மோடி, மெட்ரோ ரயில் விரிவாக்கத் திட்டத்தின் கீழ் நோபரா - தட்சிணேஸ்வரம் இடையேயான மெட்ரோ ரயில் சேவையை தொடங்கி வைத்தார். அதன்பிறகு பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், மேற்குவங்க மாநில மக்களுக்கு திரிணாமூல் காங்கிரஸ் அநீதி இழைத்து வருவதாகவும், மக்கள் மாற்றத்துக்கு தயாராகி விட்டதாகவும் கூறினார்.

  மேலும் படிக்க... 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்: தேர்தல் ஆணையம் இன்று ஆலோசனை

  வரும் தேர்தலில் வெற்றி பெற்று பாஜக நிச்சயம் ஆட்சியமைக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார். இதன்மூலம் உண்மையான மாற்றத்தை கொண்டு வந்து இளைஞர்களின் லட்சியத்தை நிறைவேற்றுவோம் என மோடி உறுதிபடக் கூறினார்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published: