முகப்பு /செய்தி /இந்தியா / "சிறந்த கட்டுமானத்துக்கு உதாரணம்.." - தமிழக கல்லணையை வியந்து பாராட்டிய பிரதமர் மோடி

"சிறந்த கட்டுமானத்துக்கு உதாரணம்.." - தமிழக கல்லணையை வியந்து பாராட்டிய பிரதமர் மோடி

காட்சிப் படம்

காட்சிப் படம்

PM Modi on Kallanai dam: தமிழ்நாட்டில் உள்ள 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த கல்லணையையும் சிறந்த உட்கட்டமைப்பிற்கான உதாரணம்: பிரதமர் நரேந்திர மோடி

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu |

இரண்டாயிரம் ஆண்டுகள் கடந்தும் கல்லணை இன்றும் சிறப்பாக இயங்கி வருவதாக பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

அடுத்த நிதியாண்டுக்கான மத்திய அரசின் பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள உள்கட்டமைப்புத் துறைக்கான திட்டங்களின் முக்கியத்துவம் குறித்து காணொலி மூலம் கருத்தரங்கு நடைபெற்றது. இதில், காணொலி வாயிலாக பேசிய பிரதமர் மோடி, நீர்வழித் தடம் மற்றும் அணைகள் கட்டமைப்பு குறித்து உரையாற்றினார். அப்போது கொல்கத்தாவில் உள்ள நீர்வழித்தடத்தையும், தமிழ்நாட்டில் உள்ள 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த கல்லணையையும் சிறந்த உட்கட்டமைப்பிற்கான உதாரணமாக பிரதமர் சுட்டிக்காட்டினார்.

மேலும், உட்கட்டமைப்பு என்பது ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு மிகவும் முக்கியம் என்று கூறிய பிரதமர், 2014-ம் ஆண்டுக்கு முன்பு இருந்ததைவிட தேசிய நெடுஞ்சாலைகள் கட்டுமானம் இரட்டிப்பாகியுள்ளதாக கூறினார். மேலும், நாட்டின் உட்கட்டமைப்பைப் போன்று சமூக கட்டமைப்பும் வலுவாக இருக்க வேண்டியது அவசியம் என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

First published:

Tags: Modi