உக்ரைன் பிரச்னை தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் போர் காரணமாக ஏற்பட்டிருக்கும் பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்பாக இந்த கூட்டத்தில் முக்கியமாக ஆலோசிக்கப்பட்டது.
கூட்டத்தில் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், வெளியுறவு அமைச்சர் ஜெய் சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பிப்ரவரி மாத இறுதியில் இதேபோன்ற கூட்டத்தை பிரதமர் மோடி நடத்தினார். அப்போது உக்ரைனில் உள்ள இந்திய குடிமக்களை இந்தியாவுக்கு மீட்டு கொண்டு வருவதற்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதாக கூறியிருந்தார்.
இதையும் படிங்க - ஐந்து மாநில முதலமைச்சர்கள் பதவியேற்பு எப்போது? மூன்று மாநிலங்களில் பா.ஜ.கவில் குழப்பம்
இன்றைய கூட்டத்தின்போது, எல்லைப் பகுதிகளிலும், கடல் மற்றும் வான்வெளியிலும், இந்தியாவின் பாதுகாப்பு நிலைகள் குறித்து பிரதமர் மோடிக்கு விளக்கப்பட்டது. உக்ரைனில் நடந்த ரஷ்யாவின் சமீபத்திய தாக்குதல்கள், போரினால் பாதிக்கப்பட்ட நாடுகளில் இருந்து இந்தியர்களுடன், இந்தியாவின் அண்டை நாடுகளைச் சேர்ந்தவர்களையும் வெளியேற்றுவதற்காக மேற்கொள்ளப்பட்ட ஆபரேஷன் கங்காவின் விவரங்களும், பிரதமர் மோடியிடம் விளக்கப்பட்டது.
இவற்றைக் கேட்டுக் கொண்ட பிரதமர் மோடி, கார்கிவ் நகரில் உயிரிழந்த நவீன் சேகரப்பாவின் உடலை மீட்டு வர அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க - மதச்சார்பின்மை, அரசியல் சாசனப் போர்வையில் மத அடிப்படைவாதம் அதிகரித்துள்ளது - ஆர்.எஸ்.எஸ். அறிக்கை
பாதுகாப்புத் துறையில் இந்தியாவை தன்னிறைவு பெறச் செய்ய அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், அது இந்தியாவின் பாதுகாப்பை வலுப்படுத்துவது மட்டுமின்றி, பொருளாதார வளர்ச்சியையும் அதிகரிக்கும் என்றும் கூட்டத்தின்போது பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.
உயர்மட்ட கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த சூழலில், பாதுகாப்பு நலன் கருதி உக்ரைனில் செயல்பட்டு வந்த இந்திய தூதரகம் போலந்து நாட்டிற்கு மாற்றப்பட்டுள்ளது. உக்ரைனில் நிலைமை சீரடையும்போது, மீண்டும் தூதரகம் உக்ரைனுக்கு மாற்றப்படும் என்று, வெளியுறவு அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Modi