மோடி 7 ஆண்டுகளிலும், யோகி 4 ஆண்டுகளிலும் ஒரு நாள் கூட லீவ் எடுக்கவில்லை!

yogi - modi

பிரதமர் மோடி 7 ஆண்டுகளில் ஒரு நாளும் விடுப்பு எடுத்துக்கொண்டதில்லை, அவருடைய நேரம் முழுதும் பொதுமக்களின் சேவைக்காகவே அர்ப்பணித்துள்ளார்.

 • Share this:
  பிரதமர் மோடி 7 ஆண்டுகளிலும், யோகி ஆதித்யநாத் 4 ஆண்டுகளில் ஒரு நாள் கூட விடுப்பு எடுத்துக்கொள்ளாமல் தேச நலனுக்காக பணியாற்றி வருவதாக உத்தரப்பிரதேச துணை முதல்வர் தினேஷ் சர்மா தெரிவித்துள்ளார்.

  டெல்லி எல்லையில் அமைந்துள்ள கிரேட்டர் நொய்டாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற உத்தரப்பிரதேச மாநில துணை முதல்வர் தினேஷ் சர்மா பேசுகையில், பிரதமராக இந்த 7 ஆண்டுகளில் பிரதமர் நரேந்திர மோடி ஒரு நாள் கூட விடுப்பு எடுத்துக் கொண்டதில்லை, அவரைப் போலவே உத்தரப்பிரதேச முதல்வராக இருக்கும் யோகி ஆதித்யநாத்தும் தனது 4 ஆண்டு பதவிக்காலத்தில் ஒரு நாள் விடுப்பு எடுத்துக் கொண்டதில்லை என கூறினார்.

  அவர் மேலும் கூறுகையில், “பிரதமர் மோடி 7 ஆண்டுகளில் ஒரு நாளும் விடுப்பு எடுத்துக்கொண்டதில்லை, அவருடைய நேரம் முழுதும் பொதுமக்களின் சேவைக்காகவே அர்ப்பணித்துள்ளார். அவரைப் போலத்தான் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தும், 4 ஆண்டுகளில் ஒரு நாள் கூட விடுப்பு எடுக்கவில்லை, இதுதான் இந்த நாடும், நம் மாநிலமும் வளர்ச்சியின் பாதையில் செல்வதற்கான காரணம்”

  உண்மையான தேசபக்தர்கள் அவர்களுக்காக வேலை பார்க்க மாட்டார்கள், அவர்கள் சமூகத்துக்காக வேலை செய்வார்கள், அதுபோன்ற ஒரு நபரால் தான் மாற்றத்தை கொண்டு வர முடியும்.

  Also Read:  2022 உத்தரப்பிரதேச சட்டமன்ற தேர்தல்: காங்கிரஸ் கட்சியின் அதிரடி ஆக்‌ஷன் பிளான்!

  பாரதிய ஜனதா கட்சி மதத்தின் பெயரால் யார் மீதும் பாகுபாடு காட்டாது. யோகி தலைமையிலான கடந்த நான்கரை ஆண்டு கால பாஜக ஆட்சியில், அரசின் திட்டங்கள் அனைத்து தரப்பினருக்காகவும் செயல்படுத்தப்பட்டிருக்கிறது, அதனால் அனைத்து தரப்பு மக்களும் பயன் அடைந்துள்ளனர்.

  yogi - modi


  குறிப்பாக பாஜக இஸ்லாமியர்களுக்கும், இந்துக்களுக்கும் இடையே பாகுபாடு காட்டுவதில்லை, அதன் காரணமாகத் தான் இந்த ஆட்சியில் ஒரு இடத்தில் கூட இந்து - முஸ்லிம் இடையே கலவரம் நடந்தது கிடையாது.” இவ்வாறு அவர் கூறினார்.

  முன்னதாக அவர் ட்விட்டரில் வெளியிட்ட பதிவில் கல்வியே இந்த அரசின் முக்கிய நோக்கமாகும், ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் முன்னுரிமை தரப்படுவதாக குறிப்பிட்டிருந்தார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Arun
  First published: