ஹோம் /நியூஸ் /இந்தியா /

பிரதமர் மோடி அபாரமான திறமைசாலி - காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் பாராட்டு

பிரதமர் மோடி அபாரமான திறமைசாலி - காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் பாராட்டு

Shashi Tharoor | Congress | இந்த அளவுக்கு பாஜக பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடிக்கும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை என்று சசி தரூர் தெரிவித்துள்ளார்.

Shashi Tharoor | Congress | இந்த அளவுக்கு பாஜக பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடிக்கும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை என்று சசி தரூர் தெரிவித்துள்ளார்.

Shashi Tharoor | Congress | இந்த அளவுக்கு பாஜக பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடிக்கும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை என்று சசி தரூர் தெரிவித்துள்ளார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  பிரதமர் மோடி அபாரமான திறமைசாலி என்று காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் பாராட்டு தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேச தேர்தல் முடிவு குறித்து பேசிய சசி தரூர் இவ்வாறு தெரிவித்தார்.

  உத்தரப்பிரதேச தேர்தல் வரலாற்றில் கடந்த 37 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பாஜக இரண்டாவது முறையாக மீண்டும் அங்கு ஆட்சியைப் பிடித்துள்ளது. முன்பு உத்தரப்பிரதேச ஆட்சி செய்த காங்கிரஸ் கட்சிக்கு மொத்தம் உள்ள 403 தொகுதிகளில் ஒன்று மட்டுமே கிடைத்தது.

  இந்நிலையில் ஜெய்ப்பூரில் நடைபெற்ற இலக்கியத்திருவிழாவில் பங்கேற்ற காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் பேசியதாவது- இந்திய வாக்காளர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் திறமை உள்ளது. ஒருநாள் அவர்கள் பாஜகவுக்கு சரியான முறையில் அதிர்ச்சி கொடுப்பார்கள். ஆனால் இன்றைக்கு பாஜக எதை விரும்பியதோ அதனை வாக்காளர்கள் கொடுத்துள்ளனர். இந்த அளவுக்கு பாஜக பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடிக்கும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. சமாஜ்வாதி கட்சி வெற்றி பெற்ற தொகுதிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அவர்கள் வலிமையான எதிர்க்கட்சியாக செயல்பாடுவார்கள் என்று நம்புகிறேன்.

  இதையும் படிங்க - காங்கிரஸின் தலைவராக சோனியா காந்தி நீடிப்பார் - காரியக் கமிட்டி கூட்டத்தில் முடிவு

  பிரதமர் மோடி அபாரமான திறமைசாலி. அரசியல் ரீதியாக எடுத்துக் கொண்டால் அவரது செயல்பாடுகள் பன்முக திறன் உடையதாகவும், மெச்சத்தகுந்த வகையிலும் இருக்கிறது. நடந்து முடிந்த தேர்தலில் பாஜக இந்த அளவுக்கு வெற்றிபெறும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. ஆனால் அதனை பிரதமர் மோடி செய்து காட்டியுள்ளார். நாட்டை மத ரீதியாக சில சக்திகள் பிளவுபடுத்த முயற்சிக்கின்றன. அவை சமூகத்தில் விஷத்தை பரப்புகின்றன. உத்தரப்பிரதேச தேர்தலில் பிரியங்கா காந்தி மிகக் கடினமான முறையில் பிரசாரம் மேற்கொண்டார்.

  இதையும் படிங்க - பிரதமர் மோடியுடன் - யோகி ஆதித்யநாத் சந்திப்பு... பதவியேற்பு விழாவுக்கு அழைப்பு

  கட்சிக்குள் அதிக பிரச்னைகள் இருக்கின்றன. ஒவ்வொரு மாநிலத்திலும் மிகக்கடுமையாக காங்கிரஸ் உழைக்க வேண்டியுள்ளது. சில மாநிலங்களில் கடந்த 30 ஆண்டுகளாக காங்கிரஸ் சரிவை சந்தித்து வருகிறது.

  இவ்வாறு அவர் பேசினார்.

  Published by:Musthak
  First published:

  Tags: Election 2022, Modi