• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • வாக்கு எண்ணிக்கை நாளில் பெட்ரோல், டீசல் விலை ரூ.10 உயரும்...! அதிர்ச்சி கொடுக்கும் காங்.

வாக்கு எண்ணிக்கை நாளில் பெட்ரோல், டீசல் விலை ரூ.10 உயரும்...! அதிர்ச்சி கொடுக்கும் காங்.

பெட்ரோல் பங்க்

பெட்ரோல் பங்க்

மே 23-ம் தேதி மாலையில், பெட்ரோல் லிட்டருக்கு 5 முதல் 10 ரூபாய் வரை விலையை உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
வாக்கு எண்ணிக்கை நாளில் பெட்ரோல், டீசல் விலையை 10 ரூபாய் உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.

இதுகுறித்து தனது ட்விட்டரில் செய்தி வெளியிட்டுள்ள காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, நாளுக்கு நாள் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துக் கொண்டிருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கச்சா எண்ணெய் விலை, கடந்த 6 மாதங்களில் இல்லாத அளவுக்கு உயர்ந்து விட்டது. டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு சரிந்து விட்டது. ஈரானில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்ய அமெரிக்கா தடை விதித்துள்ளது.

randeep surjiwala
காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா,


எல்லாவற்றையும் துணிச்சலாக பேசும் பிரதமர் மோடி, பெட்ரோல் டீசல் விலை பற்றி பேசாமல் மவுனமாக இருப்பது ஏன்? என கேள்வி எழுப்பிய அவர், வாக்கு எண்ணிக்கையான மே 23-ம் தேதி மாலையில், லிட்டருக்கு 5 முதல் 10 வரை  பெட்ரோல் மற்றும் டீசலின் விலையை உயர்த்த ஏற்பாடு நடைபெற்று வருவதாகவும் குற்றம்சாட்டினார்.

ஆனால் மக்களை யாராலும் ஏமாற்ற முடியாது என்றும் அவர்கள் தெளிவானவர்கள் என்றும் பதிவிட்டுள்ளார்.

Also see... அணுஆயுதங்களை தீபாவளிக்காகவா வைத்துள்ளோம்? 


Also see... வாக்களிக்கும் முன் தன் தாயிடம் ஆசிர்வாதம் பெற்ற பிரதமர் மோடி!


Also see...




தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.



Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vaijayanthi S
First published: