Home /News /national /

Omicron : மாநிலங்களுக்கு மத்திய குழுவை அனுப்பி வைக்க பிரதமர் மோடி உத்தரவு

Omicron : மாநிலங்களுக்கு மத்திய குழுவை அனுப்பி வைக்க பிரதமர் மோடி உத்தரவு

பிரதமர் மோடி

பிரதமர் மோடி

ஒமைக்ரான் (Omicron) பரவலால் ஐந்து மாநில சட்டசபை தேர்தலை ஒத்திவைக்குமாறு தேர்தல் ஆணையத்திற்கு, அலகாபாத் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

    இந்தியாவில் ஒமைக்ரான் (Omicron)  தொற்று பரவி வரும் நிலையில், அதிக கொரோனா பதிவு, போதிய சுகாதார கட்டமைப்பு இல்லாத மாநிலங்களுக்கு மத்திய குழுவை அனுப்பி வைக்க பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். புதியதாக பரவி வரும் ஒமைக்ரான் திரிபு, கொரோனா பாதிப்பு மற்றும் சுகாதார கட்டமைப்பு தொடர்பாக பிரதமர் மோடி தலைமையின் கீழ் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதில், மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் உள்ளிட்ட அதிகாரிகள், கொரோனா தடுப்பு மற்றும் தடுப்பூசி சிறப்பு நிபுணர் குழுவினர் பங்கேற்றனர்.

    ஆய்வுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, அனைத்து மட்டத்திலும் விழிப்புணர்வுடன் மிக எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்தினார். கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது, அதனை கையாள்வது குறித்து மாநில அரசின் முயற்சிகளுக்கு, மத்திய அரசு மிகவும் ஒருங்கிணைந்து "ஒட்டுமொத்த அரசு" என்ற அடிப்படையில் செயல்பட வேண்டும் என பிரதமர் வலியுறுத்தினார்.

    அதிகளவு மரபணு பரிசோதனைக்காக, மாதிரிகளை உரிய முறையில் அனுப்பி வைக்க வேண்டும் எனக் கூறிய மோடி, குறைவான தடுப்பூசி, அதிக கொரோனா பதிவு மற்றும் போதுமான மருத்துவ கட்டமைப்பு இல்லாத மாநிலங்களுக்கு தேவையான உதவிகளை செய்ய மத்தியக்குழுவை அனுப்பி வைக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

    தகுதி வாய்ந்த அனைத்து மக்களுக்கும் தடுப்பூசி போடுவதை உறுதிப்படுத்த வேண்டும் என்று மாநிலங்களுக்கு கேட்டுக்கொண்ட பிரதமர் மோடி, உருமாற்றம் அடைந்த கொரோனா பரவும் நிலையில், மக்கள் விழிப்புணர்வுடனும், முன்னெச்சரிக்கையுடனும் செயல்படவேண்டியது அவசியம் என்று கூறினார்.

    Read More : தமிழகத்தை ஆக்கிரமிக்கத் தொடங்கிய ஒமைக்ரான்… தொற்று எந்த வேகத்தில் பரவும்? தீவிரம் எவ்வாறு இருக்கும்?- ஆய்வு சொல்லும் தகவல

    இந்நிலையில், ஒமைக்ரான் பரவலால் ஐந்து மாநில சட்டசபை தேர்தலை ஒத்திவைக்குமாறு தேர்தல் ஆணையத்திற்கு, அலகாபாத் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. அடுத்தாண்டு தொடக்கத்தில் உத்தரபிரதேசம், பஞ்சாப், கோவா, உத்தராகண்ட், மணிப்பூர் ஆகிய மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. தேர்தலை சந்திக்கும் மாநிலங்கள், தடுப்பூசி பணிகளை வேகப்படுத்த வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியது.

    Must Read : சீனாவின் சியான் நகரில் முழு ஊரடங்கு: 1 கோடியே 30 லட்சம் மக்கள் வீடுகளுக்குள் முடக்கம்

    இந்த சூழலில், நாட்டில் ஒமைக்ரான் பரவல் வேகமெடுத்து வருவதால் தேர்தலை இரண்டு மாதங்களுக்கு ஒத்திவைக்க இந்திய தேர்தல் ஆணையத்திற்கு அலகாபாத் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

    Read More : ஒமைக்ரானை மிஞ்சும் புதிய 'டெல்மிக்ரான்' வேரியண்ட் கண்டுபிடிப்பு - அதிக ஆபத்தானதா?

    மேலும், அரசியல் கட்சிகள், பேரணிகள், பிரசார கூட்டங்கள் நடத்துவதை தடுக்க பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் கேட்டுக்கொண்டுள்ளது.
    Published by:Suresh V
    First published:

    Tags: CoronaVirus, Covid-19, Narendra Modi, Omicron

    அடுத்த செய்தி