முகப்பு /செய்தி /இந்தியா / “பிரதமர் மோடி எனக்கு ஒரு பொருட்டே இல்லை” காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி பேச்சு

“பிரதமர் மோடி எனக்கு ஒரு பொருட்டே இல்லை” காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி பேச்சு

ராகுல் காந்தி

ராகுல் காந்தி

மோடிக்கும் அதானிக்கும் உள்ள தொடர்பை புரிந்து கொள்ள வேண்டும் - ராகுல் காந்தி

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Wayanad, India

பிரதமர் மோடி தனக்கு ஒரு பொருட்டே இல்லை என்று காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

கேரள மாநிலம் வயநாட்டில் நடைபெற்ற பொது கூட்டத்தில் பேசிய அவர், பிரதமர் தன்னை மிகுந்த சக்திவாய்ந்தவராக கருதி கொண்டிருப்பதாக குற்றம்சாட்டினார். அவரை கண்டு அனைவரும் அஞ்ச வேண்டும் என்று நினைப்பதாக கூறிய ராகுல், அவர் தனக்கு ஒரு பொருட்டே இல்லை என்று தெரிவித்தார். ஒரு நாள் உண்மையை மோடி நிச்சயம் சந்திக்க வேண்டி இருக்கும் என்று ராகுல் காந்தி எச்சரித்துள்ளார்.

நாடாளுமன்ற நிகழ்வுகளை மக்கள் அவசியம் பார்க்க வேண்டும் என்று குறிப்பிட்ட ராகுல், மோடிக்கும் அதானிக்கும் உள்ள தொடர்பை புரிந்து கொள்ள வேண்டும் என்றார். நாடாளுமன்றத்தில் தனது உரையின் ஒரு பகுதி நீக்கப்பட்டதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். தான் யாரையும் அவமதிக்கவில்லை என்று கூறிய ராகுல், நாடாளுமன்றத்தில் பேசிய அனைத்தையும் ஆதாரத்துடன் சபாநாயகரிடம் சமர்பித்துள்ளேன் என்றார். ஆனால் நாட்டின் பிரதமர் தனது குடும்பத்து பெயரை சுட்டிக்காட்டி தன்னை நேரடியாக அவமதித்ததாகவும் ராகுல் குற்றம்சாட்டினார்.

First published:

Tags: Congress, PM Modi, Rahul gandhi