எந்தவொரு இந்துவும் பயங்கரவாதியாக இருக்கமுடியாது: பிரதமர் விளக்கம்!

அனைவரையும் ஆரத்தழுவும் தத்துவம் கொண்டது இந்து மதம் எனவும், அம்மதமானது பிற உயிர்களை துன்புறுத்தவோ, கொல்லவோ அனுமதிக்காது எனவும் பிரதமர் மோடி கூறியுள்ளார்.

எந்தவொரு இந்துவும் பயங்கரவாதியாக இருக்கமுடியாது: பிரதமர் விளக்கம்!
பிரதமர் நரேந்திர மோடி
  • News18
  • Last Updated: May 15, 2019, 11:41 AM IST
  • Share this:
எந்தவொரு இந்துவும் பயங்கரவாதியாக இருக்க முடியாது என, கமல் ஹாசனின் சர்ச்சைக் கருத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி விளக்கம் அளித்துள்ளார். 

இடைத்தேர்தலையொட்டி அரவக்குறிச்சி தொகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரசாரம் மேற்கொண்ட மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமல்ஹாசன், சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஓர் இந்து என்றும், மகாத்மா காந்தியை சுட்டுக்கொன்ற கோட்சே தான் அவர் என்றும் பேசினார்.

இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியதை அடுத்து, அவர் மீது அரவக்குறிச்சி போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


இந்த நிலையில், ஆங்கில தொலைக்காட்சி ஒன்றுக்கு பிரதமர் மோடி அளித்த பேட்டியில், கமலின் சர்ச்சைக் கருத்து குறித்து பதிலளித்தார். அதில், எந்தவொரு இந்துவும் பயங்கரவாதியாக இருக்க முடியாது என்று குறிப்பிட்ட பிரதமர் மோடி, இந்து மதத்தைச் சேர்ந்தவர் பயங்கரவாதியாக இருந்தால் அவர் உண்மையான இந்து அல்ல எனவும் விளக்கமளித்தார்.

அனைவரையும் ஆரத்தழுவும் தத்துவம் கொண்டது இந்து மதம் எனவும், அம்மதமானது பிற உயிர்களை துன்புறுத்தவோ, கொல்லவோ அனுமதிக்காது எனவும் பிரதமர் மோடி கூறியுள்ளார்.

Also see...
First published: May 15, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading