Home /News /national /

Exclusive: மோடி சிறுவயதிலிருந்தே கடின உழைப்பாளி, படிப்பில் திறமையானவர்: சகோதரர் பேட்டி

Exclusive: மோடி சிறுவயதிலிருந்தே கடின உழைப்பாளி, படிப்பில் திறமையானவர்: சகோதரர் பேட்டி

பிரகலாத் மோடி

பிரகலாத் மோடி

PM narendra modi: மோடி அரசு சிறப்பாக செயல்பட்டதால் 10க்கு 10க்கு மேல் தருகிறேன். அவர் கொரோனாவை சிறந்த முறையில் கையாண்டுள்ளார். சர்வதேச அளவில் இந்தியாவின் மதிப்பை புதிய உயரத்திற்கு கொண்டு சென்றுள்ளார் என்று மோடியின் சகோதரர் பிரகலாத் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்கவும் ...
    பிரதமர் நரேந்திர மோடி  சிறு வயதில் இருந்தே கடின உழைப்பாளி என்றும் படிப்பில் திறமையானவர் என்றும் அவரது இளைய சகோதரர் பிரகலாத் மோடி தெரிவித்துள்ளார்.

    பிரதமர் மோடி தலைமையிலான அரசு மத்தியில் ஆட்சி அமைத்து 8 ஆண்டுகள் நிறைவு செய்துள்ள நிலையில், அவரது இளைய சகோதரர் பிரகலாத் மோடி நியூஸ்18 ஊடகத்துக்கு பிரத்யேக பேட்டியளித்தார். பிரஹலாத் மோடி அகில இந்திய நியாய விலைக் கடை வியாபாரிகள் கூட்டமைப்பின் துணைத் தலைவராக உள்ளார். சமீப காலம் வரை நியாயவிலை கடையை நடத்தி வந்துள்ளார்.  பிரகலாத் மோடி நியூஸ்18 ஊடகத்துக்கு அளித்த பேட்டி பின்வருமாறு:

    நரேந்திர மோடி தலைமையிலான அரசு 8ம் ஆண்டை பூர்த்தி செய்துள்ளது குறித்து  எப்படி உணர்கிறீர்கள்?

    ஒரு குடும்பமாக நாங்கள் மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறோம். 1970களில் அனைத்தையும் விட்டுவிட்டு சென்றுவிட்டார். இப்போது அவர் தேசத்தின் மகன். அவர் ஒவ்வொரு இந்தியனுக்கும் காவலர். ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த அவர், இப்போது என்ன செய்கிறார் என்று பாருங்கள். அவர் இந்தியாவை பெருமைப்படுத்துகிறார். நமது நாட்டின் பிரதமரை அமெரிக்க அதிபர் பிடன் இப்படி பாராட்டுவது இதுவே முதல் முறை. மோடிஜி நம்மை மட்டும் பெருமைப்படுத்தவில்லை, இந்தியாவை பெருமைப்படுத்தியுள்ளார்

    மோடி அரசு செய்த மிக முக்கியமான விஷயம் என்ன?

    அவர் ஒவ்வொரு இந்தியர்களுடனும் நின்றவர். ‘சப்கா விகாஸ்’ தான் அவர்  விரும்பியது, அதற்காக இடையறாது உழைத்து வருகிறார். அவரால் இன்று அனைவரும் இந்தியர்களாக பெருமை கொள்கின்றனர்.

    இதையும் படிங்க: மோடி அரசின் கீழ் உலகளாவிய சுகாதாரத்தை நோக்கிய பாதையில் இந்தியா


    அவரைப் பற்றி உங்களுக்கு நினைவிருக்கிறதா?

    சிறுவயதிலிருந்தே கடின உழைப்பாளி. படிப்பில் நன்றாக இருந்தார். அவர் யாரையும் தொந்தரவு செய்ததில்லை. அவர் எதிலும் மிகவும் கவனம் செலுத்துவார் மற்றும் வித்தியாசமாக இருந்தார். நாங்கள் எப்போதும் அவரைப் பார்த்தோம். அவர் என்ன செய்தாலும் அதை நாங்கள் பின்பற்றுகிறோம்.

    அவருடைய அரசுக்கு என்ன மதிப்பெண் கொடுப்பீர்கள்?

    அவரது அரசு சிறப்பாக செயல்பட்டதால் 10க்கு 10க்கு மேல் தருகிறேன். அவர் கொரோனாவை சிறந்த முறையில் கையாண்டுள்ளார். சர்வதேச அளவில் இந்தியாவின் மதிப்பை புதிய உயரத்திற்கு கொண்டு சென்றுள்ளார். இப்போது இந்தியா சர்வதேச சகோதரத்துவத்தில் மிக முக்கியமான பங்களிப்பாளர்களில் ஒன்றாக விளங்குகிறது.

    மேலும் படிக்க: பிரதமர் நரேந்திர மோடி உத்வேகத்தின் ஊற்று: மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங்


    அவரது அரசு எட்டு ஆண்டுகளை நிறைவு செய்யும் நிலையில் அவருக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

    அவருக்கு எனது வாழ்த்துகள். அவர் ஆரோக்கியமாக இருக்க விரும்புகிறோம். அவர் இந்தியாவின் மகன் மற்றும் இந்தியாவின் பாதுகாவலர் ஆவார். மக்கள் அவரை அதிகம் விரும்புகிறார்கள், அவர் இன்னும் 15 ஆண்டுகள் ஆட்சியில் இருக்க வேண்டும். இந்தியா அவருடைய குடும்பம், இந்தியாவுக்கு அவர் தேவை.
    Published by:Murugesh M
    First published:

    Tags: MODI GOVERNMENT, PM Narendra Modi

    அடுத்த செய்தி