ஹோம் /நியூஸ் /இந்தியா /

பொருளாதாரத்தில் நலிவடைந்த 3024 பேருக்கு வீடுகளை வழங்கிய பிரதமர் மோடி..

பொருளாதாரத்தில் நலிவடைந்த 3024 பேருக்கு வீடுகளை வழங்கிய பிரதமர் மோடி..

நரேந்திர மோடி

நரேந்திர மோடி

நிகழ்ச்சியில் பேசிய பிரதமர்,  இன்று டெல்லியின் நூற்றுக்கணக்கான குடும்பங்களுக்கு ஒரு பெரிய நாள் என்றும், பல ஏழைக் குடும்பங்களுக்கு இது ஒரு புதிய தொடக்கமாகும் என்றும் கூறினார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Delhi, India

  பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கான டெல்லியில் புதிதாக கட்டப்பட்டிருக்கும் 3024 ஃபிளாட்களை பயனாளர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வழங்கினார்.

  டெல்லியின் கல்காஜி பகுதியில் குடிசை புனரமைப்பு திட்டத்தின் கீழ் புதிதாக கட்டப்பட்ட பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கான  3,024 பிளாட்டுகளை(EWS flats) தகுதி வாய்ந்த பயனாளிகளுக்கு வழங்கும் நிகழ்ச்சி இன்று நடந்தது. இதில், பிரதமர் மோடி பிளாட்டுகளுக்கான சாவிகளை உரிய பயனாளிகளிடம் வழங்கினார். நிகழ்ச்சியில் பேசிய பிரதமர்,  இன்று டெல்லியின் நூற்றுக்கணக்கான குடும்பங்களுக்கு ஒரு பெரிய நாள் என்றும், பல ஏழைக் குடும்பங்களுக்கு இது ஒரு புதிய தொடக்கமாகும் என்றும் கூறினார்.

  கல்காஜி விரிவாக்கத்தின் முதல் கட்டத்தில் மட்டும் 3000க்கும் மேற்பட்ட வீடுகள் ஏற்கனவே தயார் செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் தெரிவித்தார். மிக விரைவில், இப்பகுதியில் வசிக்கும் மற்ற குடும்பங்கள் தங்கள் புதிய வீடுகளுக்குள் நுழைய வாய்ப்பு கிடைக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

  டெல்லியில் வங்கி கணக்கு கூட இல்லாத 50 லட்சம் பேர் இருப்பதாக பிரதமர் கூறினார்.  மேலும், “அது அவர்களுக்கு வங்கி முறையின் எந்தப் பலனையும் இல்லாமல் செய்தது. அவர்கள் டெல்லியில் இருந்தனர், ஆனால் டெல்லி அவர்களிடமிருந்து வெகு தொலைவில் இருந்தது" என்றும் குறிப்பிட்டார்.

  இதையும் படிங்க: வங்கி ஊழியர்கள் வரும் 19ம் தேதி வேலை நிறுத்தப் போராட்டம் அறிவிப்பு

  தொடர்ந்து பேசிய அவர், ‘ இந்த நிலைமை அரசாங்கத்தால் மாற்றப்பட்டது மற்றும் கணக்குகளைத் திறப்பதன் மூலம் நிதி உள்ளடக்கத்திற்கான பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் டெல்லியில் உள்ள தெருவோர வியாபாரிகள் உட்பட ஏழை மக்களுக்கு நேரடி பலன் கிடைத்தது. ஸ்வாநிதி திட்டத்தின் கீழ் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தெருவோர வியாபாரிகள் நிதியுதவி பெற்றனர்’ என பெருமித்துடன் தெரிவித்தார்.

  ஏழைகளின் நலன் எங்கள் கொள்கைகளின் அடிப்படை என்றும் அவர் கூறினார்.

  Published by:Murugesh M
  First published:

  Tags: Delhi, PM Narendra Modi