ஹோம் /நியூஸ் /இந்தியா /

நாட்டில் வரவேற்கத்தக்க மாற்றம்.. இந்தியில் எம்பிபிஎஸ் திட்டத்திற்கு பிரதமர் மோடி வரவேற்பு

நாட்டில் வரவேற்கத்தக்க மாற்றம்.. இந்தியில் எம்பிபிஎஸ் திட்டத்திற்கு பிரதமர் மோடி வரவேற்பு

மோடி - அமித்ஷா

மோடி - அமித்ஷா

லட்சக்கணக்கான மாணவர்கள் தங்கள் சொந்த மொழியில் மருத்துவம் படிக்க முடியும், இதன் மூலம் அவர்களுக்கு பல வாய்ப்புகள் உருவாகும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Delhi, India

  எம்பிபிஎஸ் படிப்பை இந்தி மொழியில் பயிலும் திட்டத்தை மத்திய அமைச்சர் அமித் ஷா தொடங்கி வைத்துள்ள நிலையில், இந்த திட்டத்தை பிரதமர் மோடி பாராட்டியுள்ளார்.

  நாட்டில் முதல் முறையாக மத்திய பிரதேசத்தில் இந்தி மொழியில் மருத்துவ கல்வி பயிலும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. மத்தியப்பிரதேச மாநிலம் போபாலில் நடந்த நிகழ்ச்சியில் இந்தியில் மொழி பெயர்க்கப்பட்ட முதலாம் ஆண்டு எம்.பி.பி.எஸ் பாட புத்தகங்களை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வெளியிட்டு, இந்தியில் எம்.பி.பி.எஸ். படிக்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

  இதன்மூலம் மத்திய பிரதேசத்தில் 13 அரசு மருத்துவ கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு உடற்கூறியல், உடலியல், உயிர் வேதியியல் ஆகிய 3 இளநிலை மருத்துவப் படிப்புக்கான பாடங்கள் இந்தியில் கற்பிக்கப்படவுள்ளன. திட்டத்தை தொடங்கி வைத்து பேசிய மத்திய அமைச்சர் அமித் ஷா, "இது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நாள். இனி கிராமப்புற மாணவர்களுக்கு ஆங்கில மொழி தெரியவில்லை என்ற தாழ்வு மனப்பான்மை இருக்காது. அவர்கள் இனி தங்கள் சொந்த மொழியிலேயே பயில முடியும். தேசிய கல்விக்கொள்கையிந் ஒரு பகுதியாகவே இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது" என்றார்.

  இதையும் படிங்க: ’இந்தியை திணிக்கும் முயற்சி நாட்டை பிளவுபடுத்தும்’ - பிரதமருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்!

  இந்த திட்டத்தை வரவேற்று பிரதமர் மோடியும் பாராட்டியுள்ளார். பிரதமர் மோடி தனது ட்விட்டர் பதிவில், "மருத்துவ துறையில் இது ஒரு வரவேற்கத்தக்க தொடக்கமாகும். நாட்டில் ஒரு முக்கிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. லட்சக்கணக்கான மாணவர்கள் தங்கள் சொந்த மொழியில் படிக்க முடியும். இதன் மூலம் அவர்களுக்கு பல வாய்ப்புகள் உருவாகும்" என்றுள்ளார்.

  இந்தியாவில் பல ஆண்டுகளாக மருத்துவக்கல்வி ஆங்கிலத்தில் மட்டுமே பயிற்றுவிக்கப்பட்டு வரும் நிலையில், இனி அனைத்து இந்திய மொழிகளும் மருத்துவம் படிக்கும் வகையில் இந்த திட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. முதலாவதாக இந்தியில் இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ள நிலையில், மத்திய அரசு இந்தி திணிப்பில் ஈடுபடுவதாக, தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மாநில அரசுகள் குற்றஞ்சாட்டி வருகின்றன. எனவே, மற்ற மொழிகளில் இந்த திட்டத்தை மத்திய அரசு எப்போது செயல்படுத்தும் அல்லது இந்திக்குதான் பிரதான முக்கியத்துவம் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

  Published by:Kannan V
  First published:

  Tags: Amit Shah, Hindi, Imposing Hindi, MBBS, PM Modi