ஹோம் /நியூஸ் /இந்தியா /

குஜராத்துக்கு வந்த பிரதமர்.. ஒரே இரவில் படு ஜோராக மாறிய அரசு மருத்துவமனை!

குஜராத்துக்கு வந்த பிரதமர்.. ஒரே இரவில் படு ஜோராக மாறிய அரசு மருத்துவமனை!

காட்சிப் படம்

காட்சிப் படம்

போதிய மருத்துவ உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாத இந்த அரசு மருத்துவமனையை  சீரமைக்கும் பணிகள் இரவோடு இரவாக நடந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu |

  பிரதமர் நரேந்திர மோடியின் வருகையை ஒட்டி, குஜராத் மோர்பி பால விபத்தில் காயம் அடைந்தவர்கள் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனைக்கு இரவோடு இரவாக போலியான மருத்துவ உள்கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

  கடந்த ஞாயிற்றுக்கிழமை,சரியாக  மாலை 6.40 மணிக்கு குஜராத் மாநிலம் மோர்பி பகுதியில் உள்ள தொங்கு பாலம் விபத்துக்குள்ளானது. இதில், தற்போது 140க்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று நம்பப்படுகிறது. விபத்தில் காயமடைந்தவர்கள் அந்த பகுதியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்ற்னர்.  பால விபத்து உலகளாவிய அளவில் பேசப்பட்டு வருகின்றன. உள்ளூர் முதல் மேற்கத்திய ஊடங்கங்களை வரை மோர்பி பகுதியில் முகாமிட்டுள்ளனர்.

  இந்நிலையில், 3 நாட்கள் பயணமாக குஜராத் மாநிலத்துக்கு பிரதமர் மோடி வருகை கடந்த ஞாயிற்றுக்கிழமை வருகை புரிந்தார். நேற்று, சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்த தினத்தை முன்னிட்டு, குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற தேசிய ஒற்றுமை தின பேரணியில் தலைமை வகித்து உரையாற்றினார். இந்நிலையில், இன்று பால விபத்து ஏற்பட்ட பகுதிக்கும், காயம் அடைந்தவர்கள் சிகிச்சை பெற்று வரும் உள்ளூர் அரசு மருத்துவமனைக்கும் செல்வார் என்று அம்மாநில முதல்வர் அலுவலகம் நேற்றிரவு  அறிவித்தது.

  அறுந்து தொங்கும் குஜராத் மாடல்... அண்ணாமலைகள் இதற்கெல்லாம் வாயைத் திறக்க மாட்டார்கள் - முரசொலி கடும் விமரசனம்!

  போதிய மருத்துவ உள்கட்டமைப்பு வசதிகளை இல்லாத இந்த அரசு மருத்துவமனையை  சீரமைக்கும் பணிகள் இரவோடு இரவாக மேற்கொள்ளப்பட்டதாக தற்போது செய்திகள் தெரிவிக்கின்றன. 

  குறிப்பாக, மருத்துவமையால் நான்கு புதிய  நீர்க்குளிர்மையூட்டுகள் (Water Cooler) ஏற்பாடு செய்யப்பட்டதாகவும், ஆனால் எந்தவித  நீர் ஆதாரங்களுடன்  இணைக்கப்பட வில்லை என்றும் பிரபல ஆங்கில செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. செய்தியாளர்களின் குறுக்கீட்டின் பேரில், நீர் ஆதாரங்களுடன் இணைக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது. 

  மேலும், பிரதமரின் வருகையை ஒட்டு, அழுக்கு மக்கிப் போன் தரைகள் சுத்தம் செய்யப்பட்டு தரை விரிப்புகள் போடப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது. நோயாளிகளுக்கு புது போர்வைகள் (பக்கத்து மருத்துமையில் இருந்து வாங்கி ) வழங்கப்பட்டு, புதிய Drips- standகள் வைக்கப்பட்டதாகவும் கூறியுள்ளது. 

  மேலும், சில குறிப்பிட்ட நோயாளிகள் வேறு சிகிச்சை அறைக்கு மாற்றம் செய்யப்பட்டதாகவும், பிரதமரின் உரையாடுவதற்கு சில குறிப்பிட்ட நோயாளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, பிரதமருடனான உரையாடல் குறித்து முன்கூட்டியே அவர்களுக்கு தெரிவிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.   

  இதையும் வாசிக்க: குஜராத் மோர்பி தொங்கு பாலம் விபத்து.. உச்சநீதிமன்றம் விசாரணை..!

  நோயாளிகளின் உறவினர்கள் கூறுகையில், "  இதுவரை இந்த மருத்துவமனையில்  நீர்க்குளிர்மையூட்டுகள்  இல்லை. தற்போது தான் கொண்டு வந்து வைத்தனர்.  அடிப்படை வசதிகள் கூட இல்லாத மருத்துவமனை. எல்லாமே நாடக அரங்கேற்றம்" என்று தெரிவித்துள்ளார்.

  Published by:Salanraj R
  First published:

  Tags: Gujarat