ரமலான் வாழ்த்துகள்: கொரோனாவுக்கு எதிரான போரில் வெல்லுவோம் - பிரதமர் மோடி

ஒவ்வொருவரும் பாதுகாப்பாகவும், நலமாகவும் இருக்க கடவுளிடம் வேண்டிக் கொள்வதாக பிரதமர் தெரிவித்தார்.

ரமலான் வாழ்த்துகள்: கொரோனாவுக்கு எதிரான போரில் வெல்லுவோம் - பிரதமர் மோடி
பிரதமர் மோடி
  • Share this:
ரமலான் நோன்பு தொடங்குவதையொட்டி, இஸ்லாமிய மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் நேற்று மாலை பிறை தெரிந்ததையடுத்து, ரமலான் நோன்பு, இன்று தொடங்குவதாக தமிழக அரசின் தலைமை காஜி சலாவுதீன் முகமது அயூப் அறிவித்துள்ளார். இதனை தொடர்ந்து, 30 நாட்கள் நோன்பு இருக்கும் முஸ்லிம்கள் அதன் இறுதியில் ரம்ஜான் பண்டிகையை கொண்டாடுகின்றனர்.

இந்நிலையில் இதுகுறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில், ஒவ்வொருவரும் பாதுகாப்பாகவும், நலமாகவும் இருக்க வேண்டிக் கொள்வதாக தெரிவித்துள்ளார். இந்த புனித மாதம், அளவில்லாத அன்பு மற்றும் நல்லிணக்கத்தை வழங்கட்டும் என்றும், கொரோனா வைரஸுக்கு எதிரான போரில் வெற்றிபெற்று, ஆரோக்கியமான உலகை ஏற்படுத்துவோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் ரமலான் மாதத்தில் இஸ்லாமியர்கள் சமூக விலகலை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என இஸ்லாமிய தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர் என்பது குறிபிடத்தக்கது.

Also see...Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube
First published: April 25, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading