ஹோம் /நியூஸ் /இந்தியா /

தமிழ் சகோதர சகோதரிகளுக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள் - பிரதமர் மோடி தமிழில் வாழ்த்து

தமிழ் சகோதர சகோதரிகளுக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள் - பிரதமர் மோடி தமிழில் வாழ்த்து

PM Modi

PM Modi

வரும் புத்தாண்டு வெற்றிகளையும், சந்தோஷங்களையும் தரட்டும், அனைத்து லட்சியங்களும் நிறைவேறட்டும் - பிரதமர் மோடி வாழ்த்து செய்தி

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

தமிழ்ப் புத்தாண்டு தினம் இன்று முழு உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது.  பிலவ ஆண்டு முடிந்து, சுபகிருது ஆண்டு தொடங்கியுள்ளதை ஒட்டி, ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இந்த புத்தாண்டு தினத்தை ஓட்டி , பிரதமர் மோடி மக்களுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார். தனது வாழ்த்தில், " அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.குறிப்பாக, எனது தமிழ் சகோதர சகோதரிகளுக்கு.வரும் புத்தாண்டு வெற்றிகளையும், சந்தோஷங்களையும் தரட்டும், அனைத்து லட்சியங்களும் நிறைவேறட்டும், அனைவரும் ஆரோக்கியமாகவும் மகிழ்வுடனும் இருக்க வாழ்த்துக்கள்" என்று தெரிவித்துளார்.

பல்வேறு மாநிலங்களில்  கொண்டாட்டம் : 

கேரளாவில் விஷஷூ பண்டிகையும், ஹரியானா, ராஜஸ்தான், உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் வைசாகி பண்டிகையும் இன்று கொண்டாடப்படுகிறது. அஸ்ஸாமிலும், வடகிழக்கு மாநிலங்களிலும் புத்தாண்டு தினம் ரங்கோலி பிஹூ என்ற பெயரில் கொண்டாடப்பட்டு வருகிறது. மேற்குவங்கம், ஜார்க்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் நவபார்ஷா பண்டிகை வழக்கமான உற்சாகத்துடன் இன்று கொண்டாடப்படுகிறது.

குடியரசுத் தலைவர்:

இந்த பண்டிகைகளை ஒட்டி, குடியரசுத் தலைவர் தனது வாழ்த்து செய்தியில், "நாடு முழுவதும் கொண்டாடப்படும் இந்த பண்டிகைகள் நமது பன்முகத்தன்மையை பிரதிபலிப்பதோடு நமது ஒற்றுமையை வலியுறுத்துகிறது. தேசத்தின் முன்னேற்றத்திற்காகவும், மேம்பாட்டிற்காகவும் அயராது உழைக்கும் உழவர் சமுதாயத்திற்கு திருவிழாக்கள் இன்பம் தரும் நிகழ்வுகளாகும்.

இந்த சந்தர்ப்பத்தில், அமைதி, செழிப்பு மற்றும் மகிழ்ச்சிக்காக ஒன்றிணைந்து செயல்படவும், தேசத்தின் முன்னேற்றத்திற்காக ஒற்றுமை மற்றும் சகோதரத்துவத்தின் செய்தியைப் பரப்பவும் தீர்மானிப்போம்," என்று கூறியுள்ளார்.

குடியரசுத்  துணைத் தலைவர்:

குடியரசுத் துணைத் தலைவர் தனது வாழ்த்து செய்தியில், "வைசாகி, விஷு, புத்தாண்டு, மேஷாதி, வைஷ்காதி மற்றும் பஹாக் பிஹு ஆகிய மகிழ்ச்சியான தருணத்தை முன்னிட்டு நம் நாட்டு மக்களுக்கு எனது அன்பான நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பாரம்பரியமாக அறுவடை காலத்துடன் தொடர்புடைய இந்த திருவிழாக்கள் இயற்கையைக் கொண்டாடுகின்றன. இந்திய கலாச்சாரத்தின் செழுமையையும் பன்முகத்தன்மையையும் அவை பிரதிநிதித்துவப்படுத்துவதோடு இயற்கை மற்றும் அனைத்து உயிரினங்களுடனும் இணக்கமான சகவாழ்விற்கான நமது நாகரீக விழுமியங்களின் உண்மையான பிரதிபலிப்பாகவும் திகழ்கின்றன.நம் வாழ்வில் அமைதியையும், வளத்தையும், மகிழ்ச்சியையும் இந்த பண்டிகைகள் வழங்கட்டும்," என்று தெரிவித்துள்ளார்.

அதே போன்று, இன்று அரசியல் சாசன மாமேதை அண்ணல் அம்பேதகரின் பிறந்த நாள் இன்று நாடுமுழுவதும் கொண்டாடப்படுகிறது. தமிழகத்தில், இந்த நாளை சமத்துவ நாளாக கொண்டாடப்படும் என்று  முதலமைச்சர் ஸ்டா லின் முன்னதாக சட்டப்பேரவையில் அறிவித்தார். இன்று, சமத்துவ உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்படுகிறது.மஹாவீர் ஜெயந்தியும் இன்று நாடுமுழுவதும் கொண்டாடப்படுகிறது.

First published:

Tags: Modi, Tamil New Year