நாட்டின் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் 'ரோஸ்கார் மேளா' எனப்படும் மாபெரும் வேலைவாய்ப்பு திட்டத்தை பிரதமர் மோடி கடந்தாண்டு தொடங்கினார். இந்த திட்டத்தின் கீழ் மத்திய அரசின் அனைத்து துறைகளிலும் அடுத்த ஒன்றரை ஆண்டில் 10 லட்சம் பேருக்கு பணி நியமனம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த திட்டத்தின் கீழ் இன்று 71,426 பேருக்கு அரசு பணி நியமன ஆணையை டெல்லியில் இருந்து பிரதமர் மோடி வழங்கி காணொளி வாயிலாக வழங்கி உரையாற்றினர்.நாட்டின் பல்வேறு நகரங்களில் இருந்து பயணாளர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். தமிழ்நாட்டிலும் சென்னை, கோவை, திருச்சி உள்ளிட்ட நகரங்களில் நிகழ்வானது நடைபெற்றது.
விழாவில் உரையாற்றிய பிரதமர் மோடி, இந்த வேலைவாய்ப்பு திருவிழாவானது அரசின் நல்லாட்சியின் அடையாளமாக திகழ்கிறது. வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் அரசு உறுதியாக உள்ளதை இது காட்டுகிறது. வரும் மாதங்களில் லட்சக்கணக்கான குடும்பத்தினருக்கு அரசு வேலை கிடைக்கும்.வேலைக்கு தேர்வானவர்கள் அனைவரும் இந்தியாவின் வளர்ச்சிக்கு ஆக்கப்பூர்வமாக பங்களிக்க போகிறீர்கள். எனவே, நீங்கள் அனைவரும் மக்களுக்கு அர்பணிப்பு உணர்வுடன் பணியாற்ற வேண்டும்" என்று கூறினார்.
இதையும் படிங்க: ''பாஜகவில் சேருங்கள் இல்லையென்றால் புல்டோசர் தான்'' அமைச்சர் சர்ச்சை பேச்சால் பரபரப்பு
மத்திய அரசின் இளநிலைப் பொறியாளர்கள், ரயில் ஓட்டுநர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், ஆய்வாளர், துணை ஆய்வாளர்கள், காவலர், சுருக்கெழுத்தாளர், இளநிலை கணக்காளர், கிராமப்புற தபால் ஊழியர், வருமான வரி ஆய்வாளர், ஆசிரியர், செவிலியர், மருத்துவர், சமூகப் பாதுகாப்பு அலுவலர், தனிச்செயலர் உள்ளிட்ட பல பணிகளுக்கு நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது. புதிதாக அரசுப் பணியில் சேருபவர்களுக்கு கர்மயோகி பிராரம்ப் என்ற ஆன்லைன் மூலம் ஒருங்கிணைப்பு வகுப்புகள் நடைபெறும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Government jobs, Jobs, PM Modi