Home /News /national /

ஜெர்மனியில் பிரதமர் மோடிக்கு சிறுமி கொடுத்த அசத்தல் பரிசு... பதிலுக்கு என்ன செய்தார் தெரியுமா?

ஜெர்மனியில் பிரதமர் மோடிக்கு சிறுமி கொடுத்த அசத்தல் பரிசு... பதிலுக்கு என்ன செய்தார் தெரியுமா?

பிரதமர் மோடிக்கு சிறுமி கொடுத்த அசத்தல் பரிசு

பிரதமர் மோடிக்கு சிறுமி கொடுத்த அசத்தல் பரிசு

Viral Video | சிறுமி ஒருவர் பிரதமர் நரேந்திர மோடிக்கு தனது கையால் வரைந்த பென்சில் ஓவியத்தை பரிசளித்ததும் , அதற்கு பிரதமர் மோடி மகிழ்ச்சி அடைந்த நிகழ்வும் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

    இந்திய பிரதமர் நரேந்திர மோடி 3 நாள் பயணமாக ஐரோப்பா சென்றுள்ளார். அங்கு ஜெர்மனி, டென்மார்க், பிரான்ஸ் ஆகிய 3 நாடுகளுக்கும் பிரதமர் மோடி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். ஜெர்மனியின் புதிய அதிபராக நியமிக்கப்பட்டுள்ள ஓலாஃப் ஷோல்ஸுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக பிரதமர் மோடி ஜெர்மன் சென்றுள்ளார். இந்தியா - ஜெர்மனி இடையிலான வர்த்தகம், ராணுவ ஒத்துழைப்பு உள்ளிட்டவை குறித்து இரு நாட்டு தலைவர்களும் ஆலோசனை நடத்தியுள்ளனர்.

    தனது சுற்றுப்பயணத்தை ஜெர்மனியின் தலைநகரான பெர்லினில் இருந்து பிரதமர் மோடி தொடங்கியுள்ளார். உள்ளூர் நேரப்படி நேற்று காலை பெர்லின் சென்றடைந்த பிரதமருக்கு, பழமை வாய்ந்த பிராண்டன்பர்க் கேட் பகுதியில் உள்ள ஓட்டலில் வைத்து, அங்கு வாழும் இந்தியர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பாரம்பரிய உடைகளில் வந்த இந்திய மக்கள் கார்பா மற்றும் பிற இந்திய பாரம்பரிய நடனங்களுடன், பல்வேறு கலாச்சார நிகழ்ச்சிகளையும் நடத்தியும் பிரதமரை உற்சாகமாக வரவேற்றனர்.

    பிரதமர் மோடி ஜெர்மன் சென்றது முதலே பல வைரல் போட்டோஸ் மற்றும் வீடியோக்கள் இணையத்தை ஆக்கிரமிக்க தொடங்கிவிட்டது. பெர்லினில் அசுதோஷ் என்ற இந்திய வம்ச வழியைச் சேர்ந்த சிறுவன், தேச பக்தி பாடலை பாடிக்காட்டிய வீடியோ இணையத்தில் வைரலானது. தற்போது சிறுமி ஒருவர் பிரதமர் மோடிக்கு தனது கையால் வரைந்த பென்சில் ஓவியத்தை பரிசளித்த வீடியோவும், அதற்கு மாற்றாக பிரதமர் மோடி மகிழ்ச்சி அடைந்த நிகழ்வும் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

    மத்திய வர்த்தக துறை அமைச்சர் பியூஷ் கோயல் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள வீடியோவில், சிறுமி ஒருவர் பிரதமர் மோடிக்கு தனது கையால் வரைந்த அவரது ஓவியத்தை பரிசாக அளிக்கிறார். அதனை பெற்றுக்கொண்டு மகிழ்ச்சியடையும் பிரதமர், சிறுமியிடம் அதனை எப்படி வரைந்தாய் என கேட்கிறார். அதற்கு சிறுமியும் பென்சிலால் ஓவியம் வரைந்ததை விளக்குகிறார். பின்னர் பிரதமர் மோடி தனது உதவியாளரிடம் பேனாவை வாங்கி, அந்த ஓவியத்தில் கையெழுத்திட்டு, அதனை சிறுமிக்கே பரிசாக கொடுக்கிறார்”

    இந்த வீடியோவை பகிர்ந்துள்ள மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், "பிரதமர் நரேந்திர மோடி  தன்னை ஐகானாக கருதும் சிறுமி, பென்சிலால் வரைந்த இளம் சிறுமிக்கு ஆட்டோகிராப் போடும் இதயத்தை தூண்டும் இந்த வீடியோவை பாருங்கள் என பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவை மத்திய அமைச்சர் சோசியல் மீடியாவில் ஷேர் செய்ததில் இருந்து, 14 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கண்டு ரசித்துள்ளனர். 1800க்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர்.

     

     



     

     

    இந்த வீடியோவை 8,900க்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர்.மேலும் நூற்றுக்கணக்கானோர் சிறுமியை வாழ்த்தி பதிவிட்டு வருகின்றனர்.

    இதுகுறித்து செய்தி நிறுவனமான ஏ.என்.ஐ வெளியிட்டுள்ள தகவலின் படி சிறுமியின் பெயர் மன்யா என்பது தெரியவந்துள்ளது. பிரதமரை சந்தித்தது குறித்து மகிழ்ச்சி அடைந்துள்ள சிறுமி "பிரதமர் மோடியை சந்தித்தது ஒரு அற்புதமான அனுபவம். அவர் என்னுடைய ஐகான். நான் அவரை வரைந்த ஓவியத்தில் அவரே கையெழுத்திட்டு ‘சபாஷ்’ எனக்கூறி திரும்ப அளித்தார்” என தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: PM Modi, Viral Video

    அடுத்த செய்தி