முகப்பு /செய்தி /இந்தியா / உலகின் பிரபலமான தலைவர்கள் பட்டியல்.. பிரதமர் மோடி மீண்டும் முதலிடம்..!

உலகின் பிரபலமான தலைவர்கள் பட்டியல்.. பிரதமர் மோடி மீண்டும் முதலிடம்..!

பிரதமர் மோடி

பிரதமர் மோடி

இதே நிறுவனம் 2022ஆம் ஆண்டு பிப்ரவரியில் நடத்திய கருத்துக் கணிப்பில் 72 சதவீத ஆதரவுடன் பிரதமர் மோடி தான் முதலிடத்தில் இருந்தார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • inter, IndiaWashingtonWashington

சர்வதேச நாடுகளின் தலைவர்களின் செயல்பாடுகளையும், மக்கள் மத்தியில் அவர்களின் ஏற்பையும் அளவிடுவதற்கு பல முன்னணி அமைப்புகள் கருத்துக் கணிப்புகளை அவ்வப்போது வெளியிடும். இவை நாட்டு மக்கள் அவர்களின் தலைவர்களுக்கு வழங்கும் அங்கீகாரமாக பார்க்கப்படுகிறது.

அதிக ரேட்டிங் கொண்ட தலைவர்களை அந்நாட்டு மக்கள் அதிகம் விரும்பி ஏற்பதாகவும், குறைந்த ரேட்டிங் கொண்ட தலைவருக்கு அந்நாட்டில் அதிருப்தி உள்ளதாகவும் இந்த கருத்து கணிப்புகள் முடிவுகள் மூலம் புரிந்து கொள்ளப்படும். இந்நிலையில், அமெரிக்காவை சேர்ந்த மார்னிங் கன்சல்ட் என்ற நிறுவனம் உலகில் மிகவும் பிரபலமான தலைவர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. உலகின் 22 முன்னணி நாடுகளில் பொது மக்களிடம் நடத்திய கருத்துக்கணிப்பின் அடிப்படையில் இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டது.

அதில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி 78 சதவீத ஆதரவுடன் முதலிடத்தை பிடித்துள்ளார். அவருக்கு எதிராக 18 சதவீதம் பேர் வாக்களித்துள்ளனர். மெக்சிகோ அதிபர் லாபஸ் ஒபராடோர் 68 சதவீதத்துடன் இப்பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளார். அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் 7 ஆவது இடத்திலும், இந்திய வம்சாவளியை சேர்ந்த இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் 13 ஆவது இடத்திலும் இடம் பெற்றுள்ளனர்.

கடைசி இடங்களை ஜப்பான் பிரதமர் புமியோ ஷிடா மற்றும் நார்வே பிரதமர் ஜெனாஸ் கார் ஆகியோர் பிடித்துள்ளனர். இவர்களுக்கு 21 சதவீத ஆதரவு தான் கிடைத்துள்ளது.

இதையும் படிங்க: புதிதாக ஒரு குழந்தை பிறந்தால் 100 மரங்கள் நடப்படும்... சிக்கிம் அரசு புது திட்டம்! குவியும் பாராட்டுகள்

இதே நிறுவனம் 2022ஆம் ஆண்டு பிப்ரவரியில் நடத்திய கருத்துக் கணிப்பில் 72 சதவீத  ஆதரவுடன் பிரதமர் மோடிதான் முதலிடத்தில் இருந்தார். இந்தாண்டு  6 சதவீதம் உயர்ந்து 78 சதவீத ஆதரவு கிடைத்துள்ளது. இந்த கருத்துக்கணிப்பு ஜனவரி 26-31 தேதி அன்று திரட்டப்பட்ட தரவுகளில் இருந்து பட்டியலிடப்பட்டதாக மார்னிங் கன்சல்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

First published:

Tags: Joe biden, PM Modi, Rishi Sunak