இந்தியாவின் மிகப்பெரிய ட்ரோன் திருவிழாவான ‘பாரத் ட்ரோன் மஹோத்சவ் 2022’ ஐ டெல்லியில் பிரதமர்
மோடி தொடக்கி வைத்தார்.
இந்தியாவின் மிகப்பெரிய டிரோன் திருவிழாவான 'பாரத் டிரோன் மஹோத்சவ் 2022' இன்று முதல் இரண்டு நாட்கள் டெல்லியில் நடைபெறுகிறது. இந்த டிரோன் திருவிழாவை டெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். டிரோன்கள் பற்றிய செயல் விளக்கங்களையும் அவர் பார்வையிட்டார்.
தொடர்ந்து விவசாயத்திற்கு உதவும் டிரோன் விமானிகளுடனும் ஸ்டார்ட்அப் நிறுவன அதிகாரிகளுடனும் பிரதமர் கலந்துரையாடினார்.
முன்னதாக நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, மத்திய அரசின் கொள்கைகளால் இந்தியாவில் டிரோன் பயன்பாடு அதிகரித்துள்ளதாக தெரிவித்தார்.
இதையும் படிங்க: பாலியல் தொழிலாளர்களை மாண்புடன் நடத்த வேண்டும் - காவல்துறை, ஊடகங்களுக்கு நீதிபதிகள் வழிகாட்டுதல்
விவசாயம், மீன்பிடி தொழில், பாதுகாப்பு, பேரிடர் மேலாண்மை போன்ற துறைகளில் டிரோன்கள் பயன்பாடு அதிகரிக்கும் என்று கூறினார். விளைநிலங்களில் பூச்சி கொல்லி தெளிப்பது போன்ற பணிகளை டிரோன்கள் சிறப்பாக செய்து வருவதாகவும், டிரோன் தொழில்நுட்பம் வேளாண் துறையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் என்றும் குறிப்பிட்டார்,
பின்னர் பிரகதி மைதானத்தில் டிரோன் ஒன்றை இயக்கிய பிரதமர் மோடி, அதனை பல அடி உயரத்திற்கு பறக்க செய்து டிரோனின் கண்காணிப்பு செயல்பாடுகளையும் பரிசோதித்தார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.