இந்தியாவின் மிகப்பெரிய ட்ரோன் திருவிழாவான – பாரத் ட்ரோன் மகோத்ஸவத் 2022 – ஐ பிரதமர் திரு நரேந்திர
மோடி நேற்று தொடங்கிவைத்தார். அப்போது பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் Asteria Aerospace நிறுவனத்தின் கண்காணிப்பு ட்ரோனை பிரதமர் மோடி பறக்கவிட்டார்.
நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, ட்ரோன் கண்காட்சி, தொழில்முனைவோரின் நல்லுணர்வு, இந்த துறையில் புதிய கண்டுபிடிப்பு ஆகியவை தம்மை வெகுவாக கவர்ந்துள்ளது என்றும் வேலைவாய்ப்பை உருவாக்க அதிகபட்ச வாய்ப்புகளை கொண்ட மிகப்பெரிய துறையாக ட்ரோன் துறை உள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இந்த நிகழ்வில், பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஸ்டார்ட் அப் நிறுவனமான ஆஸ்டீரியா ஏரோஸ்பேஸ் ( Asteria Aerospace) தொழில் துறைகளில் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு, கணக்கெடுப்பு மற்றும் ஆய்வு பயன்பாடுகளுக்கு அதன் கரடுமுரடான, நம்பகமான மற்றும் செயல்திறன் சார்ந்த ட்ரோன்களை காட்சிப்படுத்தியது.
ஆஸ்டீரியா, ட்ரோன் சேவை தீர்வுகளை வழங்குவதற்கான தனது கிளவுட் அடிப்படியிலான ட்ரோன் செயல்பாட்டு தளமான ஸ்கைடெக்கையும் (SkyDeck)காட்சிப்படுத்தியது. சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் மற்றும் இந்திய ட்ரோன் கூட்டமைப்பு இணைந்து நடத்திய நிகழ்ச்சியை துவக்கி வைத்த பிரதமர் மோடி, ஆஸ்டீரியாவின் ஆளில்லா விமானங்களில் ஒன்றை பறக்க நேரம் ஒதுக்கினார். ஆஸ்டீரியா ஏரோஸ்பேஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் நிஹார் வர்தக் கூறுகையில், தங்கள் நிறுவனம் அதன் தொழில்நுட்பம் மற்றும் தீர்வுகளை காட்சிப்படுத்த, இந்நிகழ்ச்சி ஒரு சிறந்த வாய்ப்பாகும் என தெரிவித்தார்.
இதையும் படிங்க: மோடி சிறுவயதிலிருந்தே கடின உழைப்பாளி, படிப்பில் திறமையானவர்: சகோதரர் பேட்டி
இது தொடர்பாக அவர், “பத்து ஆண்டுகளுக்கு முன்பு, இந்தியாவில் ட்ரோன் தொழில்துறையில் நுழைந்த சில நிறுவனங்களில் நாங்கள் ஒன்றாக இருந்தோம், அதன் பின்னர் பல தொழில் துறைகளில் இந்தத் தொழில்நுட்பத்தின் தேவை மற்றும் பயன்பாட்டில் அதிவேக வளர்ச்சியைக் கண்டோம். ட்ரோன் தொழில்நுட்பம் மூலம் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய புதிய வழிகளை நாங்கள் தொடர்ந்து ஆராய்வோம்” என குறிப்பிட்டார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.