ஹோம் /நியூஸ் /இந்தியா /

4ஆவது வந்தே பாரத் ரயிலை கொடியசைத்து தொடங்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி

4ஆவது வந்தே பாரத் ரயிலை கொடியசைத்து தொடங்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி

வந்தே பாரத் ரயில் சேவையை கொடி அசைத்து தொடங்கி வைத்த பிரதமர் மோடி

வந்தே பாரத் ரயில் சேவையை கொடி அசைத்து தொடங்கி வைத்த பிரதமர் மோடி

நாட்டின் 4ஆவது வந்தே பாரத் விரைவு ரயிலை இமாச்சல் மாநிலத்தில் பிரதமர் மோடி கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Himachal Pradesh, India

  இமாச்சலப் பிரதேச மாநிலத்திற்கு பல நலத் திட்ட உதவிகளை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அப்போது உள்நாட்டிலேயே தயாரான அதிவேக சிறப்பு ரயிலான வந்தே பாரத் ரயிலின் நான்காவது வழித்தடச் சேவையை தொடங்கிவைத்தார். இமாச்சலின் உனாவின் அம்ப் அண்டவ்ராவிலிருந்து புதுதில்லிக்கு செல்லும் இந்த புதிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கிவைத்தார்.

  முன்னதாக, உனா ரயில் நிலையத்திற்கு வருகை தந்த பிரதமர் மோடி வந்தே பாரத் எக்ஸ்பிரசின் பெட்டிகளை ஆய்வு செய்து அதில் உள்ள வசதிகளை பார்வையிட்டார். வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலின் என்ஜின் கட்டுப்பாட்டு மையத்தையும் அவர் சோதனையிட்டார். இந்த நிகழ்வின் போது பிரதமருடன் இமாச்சலப்பிரதேச முதலமைச்சர் ஜெய்ராம் தாக்கூர், ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் ஆகியோர் இருந்தனர்.

  ரயில்வே ஊழியர்களிடம் கலந்துரையாடிய பிரதமர் மோடி, இந்த ரயிலின் அறிமுகம் இப்பகுதியில் சுற்றுலாவை மேம்படுத்தவும், பயணிகளுக்கு வசதியான மற்றும் வேகமான பயணத்தை வழங்கவும் உதவும் என்றார். வந்தே பாரத் ரயில் சேவை மூலம் உனாவிலிருந்து புதுதில்லிக்கு பயண நேரம் இரண்டு மணி நேரம் குறைக்கப்படும். நாட்டில் அறிமுகப்படுத்தப்படும் நான்காவது வந்தே பாரத் ரயில் இதுவாகும். மேலும் இது முந்தைய வந்தே பாரத் ரயில்களை விட மேம்பட்டதாக இருக்கும் என இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது. புதன்கிழமையைத் தவிர வாரத்திற்கு ஆறு நாள்கள் இந்த ரயில் சேவை இருக்கும். டெல்லி, அம்பாலா, சண்டிகர், அனந்த்பூர் சாஹிப், உனா ஆகிய இடங்களில் இந்த ரயில் நிற்கும்.

  இதையும் படிங்க: அறிவு அனைத்து மக்களுக்கும் பயனளிக்க வேண்டும்.. 5 ரூபாய் மருத்துவர் ஷங்கரே கவுடா பேச்சு

  இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் அடுத்த மாதம் அல்லது டிசம்பர் தொடக்கத்தில் தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளது. இந்த பின்னணியில் பிரதமர் மோடி பல்வேறு திட்டங்களை மாநிலத்தில் தொடங்கி வைக்கிறார். குஜாரத்திலும் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், கடந்த வாரம் மூன்றாவது வந்தே பாரத் ரயில் சேவை குஜராத் மாநிலம் காந்தி நகர் -மும்பை வழித்தடத்தில் தொடங்கிவைத்தார்.

  Published by:Kannan V
  First published:

  Tags: Himachal Pradesh, Indian Railways, PM Modi, Vande Bharat