சென்னை சென்ட்ரலில் இருந்து குஜராத் மாநிலம் கேவதியாவுக்கு இயக்கப்படும் அதிவிரைவு சிறப்பு ரயிலை பிரமதா் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். சென்ட்ரல் - கேவதியா இடையே புதிய வாராந்திர அதிவிரைவு சிறப்பு ரயிலுக்கு, ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்தது. இதைத்தொடா்ந்து இந்த ரயில் சேவையை, பிரமதா் மோடி டெல்லியில் இருந்து காணொலி காட்சி மூலமாக, காலை 11 மணிக்கு தொடங்கி வைத்தார்.
அதன்படி இன்று முற்பகல் 11:12 மணிக்கு சென்ட்ரலில் இருந்து புறப்பட்ட அதிவிரைவு வாராந்திர சிறப்பு ரயில், மறுநாள் பிற்பகல் 2:52 மணிக்கு கேவதியாவை சென்றடையும். வரும் 20ஆம் தேதி முதல் வழக்கமான சேவைகள் தொடங்கவுள்ளன. நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து, குஜராத் மாநிலம் கேவதியா செல்லும் 8 ரயில்களையும் பிரதமர் தொடங்கி வைத்தார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.