வாரணாசி தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார் பிரதமர் மோடி!

வாரணாசியில் அமைந்துள்ள பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகத்திற்கு சென்ற மோடி, பல்கலைக்கழக நிறுவனரான மறைந்த மதன் மோகன் மாளவியா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

news18
Updated: April 26, 2019, 12:12 PM IST
வாரணாசி தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார் பிரதமர் மோடி!
பிரதமர் மோடி
news18
Updated: April 26, 2019, 12:12 PM IST
மக்களவை தேர்தலில் வாரணாசி தொகுதியில் போட்டியிடும் பிரதமர் மோடி, தனது வேட்புமனுவை இன்று தாக்கல் செய்தார்.

மக்களவைத் தேர்தலில் உத்தரபிரதேசத்தின் வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி போட்டியிடுகிறார். அதற்காக, இன்று அவர் வேட்பு மனுவைத் தாக்கல் செய்ய திட்டமிட்டிருந்தார். நேற்று வாரணாசியில் சாலை வழியாக திறந்த வாகனத்தில் மோடி பேரணியில் ஈடுபட்டார்.

அவருக்கு சாலை நெடுகிலும் பா.ஜ.க தொண்டர்கள் திரண்டு மிகப் பெரும் வரவேற்பை அளித்தனர். வாரணாசியில் அமைந்துள்ள பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகத்திற்கு சென்ற மோடி, பல்கலைக்கழக நிறுவனரான மறைந்த மதன் மோகன் மாளவியா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.


இதையடுத்து, சாலை மார்க்கமாக மோடி பேரணி சென்றார். வாரணாசியில் உள்ள தசாஸ்வமேத் நதி முகத்துவார பகுதி வரை பேரணி நடைபெற்றது. இந்தப் பேரணியில் பாஜக மூத்த தலைவர்கள், மத்திய அமைச்சர்கள் கலந்து கொண்டனர். அதனைத்தொடர்ந்து அவர் கங்கை நதியில் வழிபாடு நடத்தினார்.

இந்நிலையில், இன்று காலை வாரணாசி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அவருக்கு தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் வரவேற்பு அளித்தனர். பின்னர், தேர்தல் அதிகாரியிடம் தனது மனுவை மோடி தாக்கல் செய்தார்.இந்த நிகழ்வில் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர் வேலுமணி, அதிமுக எம்.பி தம்பிதுரை, வேணுகோபால் ஆகியோர் பங்கேற்றனர்.

காங்கிரஸ் கட்சி சார்பில் அஜய் ராஜ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
First published: April 26, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...