முகப்பு /செய்தி /இந்தியா / இயேசுவின் உயரிய சிந்தைனைகளை நினைவு கூர்வோம் - பிரதமர் மோடி வாழ்த்து

இயேசுவின் உயரிய சிந்தைனைகளை நினைவு கூர்வோம் - பிரதமர் மோடி வாழ்த்து

பிரதமர் மோடி

பிரதமர் மோடி

பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் கிறிஸ்துமஸ் வாழ்த்து செய்தியை பகிர்ந்துள்ளார்.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Delhi, India

இயேசு பிறந்த நாளான டிசம்பர் 25ம் தேதியை உலகம் முழுவதும் கிறிஸ்தவர்கள் புனித நாளாக கருதி கிறிஸ்துமஸ் தினத்தைக் கொண்டுவருகின்றனர். எனவே, இன்று உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. கிறிஸ்துமஸ் தினத்தை ஒட்டி பல்வேறு தலைவர்களும் தங்கள் வாழ்த்து செய்தியை பகிர்ந்து வருகின்றனர்.

பிரதமர் நரேந்திர மோடியும் தனது ட்விட்டர் பக்கத்தில் கிறிஸ்துமஸ் வாழ்த்து செய்தியை பகிர்ந்துள்ளார். அவர் தனது பதிவில், கிறிஸ்துமஸ் வாழ்த்துகள். இந்த சிறந்த நாள் சமூகத்தில் மகிழ்ச்சியையும் ஒற்றுமையையும் பரப்பட்டும். இயேசு கிறிஸ்த்துவின் சிறந்த சிந்தைனைகளையும் செயல்களையும் நாம் நினைவு கூர்வோம் என்றுள்ளார்.

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவும் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து செய்தியை தெரிவித்துள்ளார். முன்னதாக அவர் டெல்லியில் உள்ள புனித இருதய தேவாலயத்தில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்று, குழந்தைகளுடன் கொண்டாடினார்.

மனித குலத்தின் மேன்மை மற்றும் நலனுக்காக பிரார்த்தனை செய்ததாக குடியரசுத் தலைவர் கூறியுள்ளார்.

First published:

Tags: Christmas, Christmas eve, Jesus Christ, PM Modi, President Droupadi Murmu