இளைஞர்களை வெளிநாட்டுக்குச் செல்லத் தூண்டாத ஒரு சூழலை உருவாக்க முயன்று வருகிறோம்: பிரதமர் மோடி
“உங்களை நம்புங்கள்” என்பது சுவாமி விவேகானந்தரின் அறிவுரை; தலைமைப் பண்பு மற்றும் குழு சார்ந்த பணிகளுக்கு “அனைவரையும் நம்புங்கள்” என்று சுவாமி தெரிவித்தார்.

பிரதமர் மோடி.
- News18 Tamil
- Last Updated: January 12, 2021, 4:37 PM IST
இரண்டாவது தேசிய இளைஞர் நாடாளுமன்ற விழாவின் இறுதி நாள் நிகழ்ச்சியில் இன்று கலந்து கொண்டு பேசிய பிரதமர், தலைமைப் பண்பு குறித்த சுவாமி விவேகானந்தரின் அறிவுரையை நம் நாட்டின் இளைஞர்கள் பின்பற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:
சுவாமி விவேகானந்தரால் ஈர்க்கப்பட்டு தனிநபர்கள் நிறுவனங்களை உருவாக்குவார்கள், இந்த நிறுவனங்கள் புதிய நிறுவனங்களை கட்டமைப்பவர்களை உருவாக்குகின்றன. தனிநபர் வளர்ச்சி முதல் நிறுவன கட்டுமானம் வரையிலும், நிறுவன கட்டுமானம் முதல் தனிநபர் வளர்ச்சி வரையிலான ஒரு சுழற்சியை இது துவக்குகிறது. ஒரு தனிநபர் மிகப்பெரும் நிறுவனத்தை உருவாக்குகிறார், அந்த நிறுவனத்தின் சூழ்நிலை பல்வேறு அறிவு மிக்க தனி நபர்களின் வளர்ச்சிக்கு வித்திடுகிறது, அவர்கள் புதிய நிறுவனங்களை உருவாக்குகின்றனர்.
தேசிய கல்விக் கொள்கையின் மூலம் வழங்கப்பட உள்ள நெகிழ்வுத் தன்மை, புதுமையான கற்கும் முறைகள் முதலியவற்றை இளைஞர்கள் வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இளைஞர்களின் உயர்ந்த லட்சியங்கள், திறமைகள், புரிதல், விருப்பங்களுக்கு முன்னுரிமை வழங்கி மேம்பட்ட தனிநபர்களை உருவாக்குவதை இந்தக் கொள்கை நோக்கமாகக் கொண்டுள்ளது. மேம்பட்ட கல்வி, தொழில்முனைவு வாய்ப்புகள் இளைஞர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது இளைஞர்களை வெளிநாடுகளுக்குச் செல்ல தூண்டாத வகையிலான ஒரு சூழலியலை உருவாக்க முயன்று வருகிறோம்.தன்னம்பிக்கையான, தெளிவான மனதுடைய, அச்சமில்லாத, தைரியமான இளைஞர்களை நாட்டின் அடித்தளமாக சுவாமி விவேகானந்தர் தான் அங்கீகரித்தார். உடல் நல தகுதிக்கு “இரும்பை போன்ற தசைகளும் எஃகைப் போன்ற நரம்புகளும்” என்பதை ஃபிட் இந்தியா இயக்கம், யோகா, நவீன வசதிகள் மூலம் விளையாட்டுத் துறையினருக்கு அளித்து அரசு ஊக்குவித்து வருகிறது. தனித்தன்மை மேம்பாட்டிற்கு “உங்களை நம்புங்கள்” என்பது சுவாமி விவேகானந்தரின் அறிவுரை; தலைமைப் பண்பு மற்றும் குழு சார்ந்த பணிகளுக்கு “அனைவரையும் நம்புங்கள்” என்று சுவாமி தெரிவித்தார்.
இவ்வாறு பேசினார் பிரதமர் நரேந்திர மோடி.
பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:
சுவாமி விவேகானந்தரால் ஈர்க்கப்பட்டு தனிநபர்கள் நிறுவனங்களை உருவாக்குவார்கள், இந்த நிறுவனங்கள் புதிய நிறுவனங்களை கட்டமைப்பவர்களை உருவாக்குகின்றன.