ஹோம் /நியூஸ் /இந்தியா /

பிரதமர் மோடி என்னை பாராட்டவில்லை, உண்மையைத்தான் சொன்னார் - அசோக் கெலாட் கருத்து

பிரதமர் மோடி என்னை பாராட்டவில்லை, உண்மையைத்தான் சொன்னார் - அசோக் கெலாட் கருத்து

பிரதமர் மோடியுடன் அசோக் கெலாட்

பிரதமர் மோடியுடன் அசோக் கெலாட்

அசோக் கெலாட்டை பிரதமர் பாராட்டியதை சாதாரணமாக எடுத்துக்கொள்ள கூடாது என சச்சின் பைலட் விமர்சித்து கருத்து தெரிவித்திருந்தார்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Rajasthan, India

  ராஜஸ்தானில் முதலமைச்சர் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு இளம் தலைவர் சச்சின் பைலட்டிற்கும் அசோக் கெலாட்டிற்கும் அதிகாரத்திற்கான மோதல் நீண்ட காலமாக இருந்து வரும் நிலையில், அன்மையில் அது உச்சம் தொட்டது. காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிட அசோக் கெலாட் விருப்பம் தெரிவித்திருந்த நிலையில், கெலாட் தலைவரானால் சச்சின் பைலட்டை முதலமைச்சராக ஆக்க காங்கிரஸ் மேலிடம் நகர்வுகளை மேற்கொண்டன.

  ஆனால், அசோக் கெலாட்டிற்கு முதலமைச்சர் பதவி தன் கையைவிட்டு செல்லவும், குறிப்பாக அது சச்சின் பைலட் கைககளுக்கு செல்லவும் விருப்பம் இல்லை. சச்சின் பைலட்டிற்கு எதிராக அசோக் கெலாட் ஆதரவு எம்எல்ஏக்கள் போர்க்கொடி தூக்கி மேலிடத்தின் நகர்வுகளை தடுத்து நிறுத்தினர். தொடர்ந்து காங்கிரஸ் தலைவர் போட்டியில் இருந்து விலகி முதலமைச்சராகவே தொடர்வதாக கெலாட் தெரிவித்தார்.

  இது சச்சின் பைலட்டிற்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், ராஜஸ்தானில் கடந்த செவ்வாய் கிழமை நடந்த அரசு நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடியுடன், அசோக் கெலாட் ஒரே மேடையில் பங்கேற்றார். மேலும், இந்த நிகழ்வில் அசோக் கெலாட்டை குறிப்பிட்டு புகழ்ந்து பேசிய பிரதமர் மோடி, "நாட்டின் மிக மூத்த தலைவர்களில் அசோக் கெலாட் ஒருவர். குஜராத்தின் முதலமைச்சராக நான் இருந்த போதே அவர் ராஜஸ்தானின் முதலமைச்சராகவும் மூத்த தலைவராகவும் இருந்தார். இத்தனை ஆண்டுகளுக்குப் பின் இப்போதும் நாட்டின் மிக மூத்த முதலமைச்சராக அவரே தொடர்கிறார்" என்றார்.

  பிரதமர் மோடி அசோக் கெலாட்டை குறிப்பிட்டு பேசிய கருத்துக்கு சச்சின் பைலட் பூடகமாக விமர்சனத்தை முன்வைத்துள்ளார். ராஜஸ்தான் முதலமைச்சரை பிரதமர் மோடி பாராட்டியது ஆச்சரியம் அளிக்கிறது. இதற்கு முன்னர் அன்றைய காங்கிரஸ் தலைவர் குலாம் நபி ஆசாத்தை நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பாராட்டினர். அதன் பின்னர் என்ன நடந்தது என்று நமக்கு தெரியும். எனவே, அசோக் கெலாட்டை பிரதமர் பாராட்டியதை சாதாரணமாக எடுத்துக்கொள்ள கூடாது என்றார். சச்சின் பைலட்டின் இந்த கருத்து ராஜஸ்தான் காங்கிரசில் பெரும் புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது.

  இதையும் படிங்க: காங்கிரஸ் மூழ்கும் கப்பல்.. 2024 தேர்தலுக்குப் பின் அரசியிலில் இருந்து வெளியேறிவிடும் - அமித் ஷா விமர்சனம்

  இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து அசோக் கெலாட் தன் பங்கிற்கு விளக்கம் அளித்துள்ளார். ராஜஸ்தானில் செய்தியாளர்களிடம் பேசிய கெலாட், "பிரதமர் மோடி என்னை மூத்த தலைவர் என்று தானே கூறினார். இதில் பாராட்டு என்ன இருக்கிறது. அவர் உண்மையை தான் கூறினார். அவர் ஒன்றும் எனது செயல்பாட்டைக் குறிப்பிட்டு பாராட்டு தெரிவிக்கவில்லை" என அசோக் கெலாட் பதிலளித்தார். கட்சியில் உள்ள பூசல் குறித்து பேசிவிரும்பவில்லை என்ற அசோக் கெலாட், வரப்போகும் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைப்பதே எனது நோக்கம் என்றார்.

  Published by:Kannan V
  First published:

  Tags: Ashok Gehlot, PM Modi, Rajasthan, Sachin pilot