Home /News /national /

நாற்காலியை துறந்து தொழிலாளர்களுடன் தரையில் அமர்ந்த பிரதமர் மோடி - வைரல் வீடியோ

நாற்காலியை துறந்து தொழிலாளர்களுடன் தரையில் அமர்ந்த பிரதமர் மோடி - வைரல் வீடியோ

நரேந்திர மோடி

நரேந்திர மோடி

பிரதமர் நரேந்திர் மோடி, தனக்காக போடப்பட்டிருந்த நாற்காலியில் அமர மறுத்து அதனை அங்கிருந்த அதிகாரி ஒருவரிடம் கொடுத்தார். பின்னர் கட்டிட பணிகளில் ஈடுபட்ட தொழிலாளர்களுடன் தரையில் அமர்ந்த மோடி, தொழிலாளர்களை தன் அருகில் வந்து அமரும்படி பணித்தார்

மேலும் படிக்கவும் ...
    காசி விஸ்வநாதர் கோயிலில்  பல கோடி ரூபாய் செலவில் செய்யப்பட்ட மேம்படுத்தப்பட்ட உட்கட்டமைப்புகளை சில தினங்களுக்கு முன்பு பிரதமர் மோடி திறந்துவைத்தார். இந்த நிகழ்வின்போது, தனக்காக போடப்பட்ட நற்காலியில் அமராமல் கட்டமைப்பு பணிகளில் ஈடுபட்ட தொழிலாளர்களுடன் பிரதமர் மோடி அமர்ந்தது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.

    பிரதமர் நரேந்திர மோடி தனது சொந்த தொகுதியான உத்தரப் பிரதேசம் மாநிலம் வாரனாசிக்கு கடந்த 13ம் தேதி 2 நாள் பயணமாக சென்றார். அப்போது, 339 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான காசி விஸ்வநாதர் கோவில் வளாக திட்டத்தை மக்களுக்கு அவர் அர்ப்பணித்தார்.

    காசி விஸ்வநாதர் ஆலய வளாகத்தை திறந்து வைத்த பிரதமர் மோடி, அங்கு தீப ஆராதனை செய்து வழிபாட்டில் ஈடுபட்டார். இதனையடுத்து மாலை கங்கை நதியில் புனித நீராடி அங்கு நடைபெற்ற ஆரத்தி நிகழ்ச்சியிலும் அவர் கலந்து கொண்டார். ஆலய கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களுடன் பிரதமர் மோடி ஒன்றாக அமர்ந்து உணவருந்தினார். வாரணாசி மக்களிடம் பிரதமர் மோடி உரையாடினார்.



    முன்னதாக, ஆலய கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களுடன் பிரதமர் மோடி அமர்வதற்கு நாற்காலி வசதி செய்யப்பட்டிருந்தது. நிகழ்வு நடைபெறும் இடத்திற்கு வந்த பிரதமர் நரேந்திர் மோடி, தனக்காக போடப்பட்டிருந்த நாற்காலியில் அமர மறுத்து அதனை அங்கிருந்த அதிகாரி ஒருவரிடம் கொடுத்தார். பின்னர் கட்டிட பணிகளில் ஈடுபட்ட தொழிலாளர்களுடன் தரையில் அமர்ந்த மோடி, தொழிலாளர்களை தன் அருகில் வந்து அமரும்படி பணித்தார்.  இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

    இதையும் படிங்க: பூடான் நாட்டின் உயரிய விருது பிரதமர் மோடிக்கு அறிவிப்பு


     
    Published by:Murugesh M
    First published:

    Tags: PM Modi, PM Narendra Modi, Varanasi

    அடுத்த செய்தி