EXCLUSIVE : காங்கிரஸின் தேர்தல் அறிக்கை வெறும் அறிவிப்பு... பா.ஜ.க வெளியிட்டது தீர்மானம்!

'காங்கிரஸின் பேச்சுகளை எந்தவொரு தேசப்பற்று உள்ளவரும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். '

Web Desk | news18
Updated: April 9, 2019, 7:21 PM IST
EXCLUSIVE : காங்கிரஸின் தேர்தல் அறிக்கை வெறும் அறிவிப்பு... பா.ஜ.க வெளியிட்டது தீர்மானம்!
மோடி
Web Desk | news18
Updated: April 9, 2019, 7:21 PM IST
காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க-வின் தேர்தல் அறிக்கைகள் இடையேயான வித்தியாசம் குறித்து பிரதமர் மோடி பேசியுள்ளார்.

நியூஸ் 18-க்கு கொடுத்த பிரத்யேக பேட்டியில் பிரதமர் மோடி பேசும் போது, “பெயரிலேயே வித்தியாசம் உள்ளது. எங்களது தேர்தல் அறிக்கையை எங்களது சாதனைகளின் ஊடாகக் காணவேண்டும். இரண்டு அறிக்கைகளுக்கும் பல வேறுபாடுகள் இருக்கின்றன. நாங்கள் தீவிரவாதத்தை ஒழிக்க நினைக்கிறோம். தீவிரவாதிகளுக்கு எதிராக உளவியல் ரீதியான வெற்றியை நாங்கள் அடைந்துள்ளோம்.

ஆனால், காங்கிரஸ் அறிக்கை தீவிரவாதத்துக்கு எதிரானதாகத் தெரியவில்லை. பாகிஸ்தானை எப்படிப் பார்க்க வேண்டுமோ அப்படித்தான் அவர்கள் நமது ராணுவத்தைப் பார்க்கிறார்கள். காங்கிரஸின் பேச்சுகளை எந்தவொரு தேசப்பற்று உள்ளவரும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டத்தை நீக்கப்போவதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது. இது ஒரு வீரனின் கையிலிருந்து ஆயுதத்தைப் பிடுங்குவது போன்றதாகும்.


இந்திய அமைதி காக்கும் படையுடன் தொடக்கத்திலிருந்தே இந்திய ராணுவ வீரர்கள் ஒரு அங்கமாக இருக்கிறார்கள். இந்திய ராணுவ வீரர்களின் ஒழுக்கமும் பற்றும் காலம் காலமாக போற்றப்பட்டு வருகிறது. ஆனால், ஒரு 50- 60 ஆண்டுகள் வரையில் நாட்டை ஆண்ட ஒரு கட்சி இதுபோன்று பேசுவது சரியல்ல” என்றார்.

First published: April 9, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...