ஹோம் /நியூஸ் /இந்தியா /

75 மாவட்டங்களில் 75 டிஜிட்டல் வங்கி அலகுகளை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி!

75 மாவட்டங்களில் 75 டிஜிட்டல் வங்கி அலகுகளை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி!

75 டிஜிட்டல் வங்கி அலகுகளை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

75 டிஜிட்டல் வங்கி அலகுகளை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

ஏழைகளின் வீட்டு வாசலில் வங்கி சேவைகள் சென்று சேர வேண்டும் என்பதே அரசின் நோக்கம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Delhi, India

  நாட்டின் 75 மாவட்டங்களில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள 75 டிஜிட்டல் வங்கி அலகுகளை பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலம் தொடங்கிவைத்தார். இந்த நிகழ்வில் பிரதமருடன் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் ஆகியோர் காணொலி காட்சி வாயிலாக பங்கேற்றனர். அனைவரையும் உள்ளடக்கிய நிதி நடைமுறையை மேலும் வலுப்படுத்தும் மற்றொரு நடவடிக்கையாக இந்த திட்டத்தை முன்னெடுத்துள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.

  இந்த திட்டத்தை தொடங்கி வைத்து பேசிய பிரதமர் மோடி, "வங்கித்துறையில் அரசு இரு வேலைகளை தீவிரமாக செய்து வருகிறது. ஒன்று வங்கிகளின் நிலையை வலுப்படுத்தி அதில் ஒளிவுமறைவற்ற தன்மையை உருவாக்குவது. மற்றொன்று நாட்டின் குடிமக்கள் அனைவருக்கு வங்கிசேவைகளை கொண்டு சேர்ப்பது. அதன் முக்கிய நகர்வாகவே இந்த 75 டிஜிட்டல் வங்கி அலகுகள் இன்று தொடங்கப்பட்டுள்ளன. ஏழைகளின் வீட்டு வாசலில் கூட வங்கி சேவைகள் சென்று சேர வேண்டும் என்பதே அரசின் நோக்கம். அதை இந்த டிஜிட்டல் வங்கிகள் சாத்தியப்படுத்தும். எனவே கடைக்கோடி பகுதிகளிலும் வங்கி சேவைகளை கொண்டு சேர்க்க அரசு செயலாற்றி வருகிறது" என்றார்.

  நாட்டின் 75ஆவது ஆண்டு சுதந்திர தின கொண்டாட்டம் நடைபெற்று வரும் வேளையில், அதை குறிக்கும் வகையில் 75 மாவட்டங்களில் 75 டிஜிட்டல் வங்கி அலகுகள் ஏற்படுத்தப்படும் என இந்தாண்டு மத்திய பட்ஜெட் உரையில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்தார். டிஜிட்டல் வங்கி சேவையின் பயன்கள் நாட்டில் உள்ள ஒவ்வொரு மூலை முடுக்கையும் சென்றடைவதை நோக்கமாக கொண்டு இந்த டிஜிட்டல் வங்கி அலகுகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இவை நாட்டின் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் அமைக்கப்படுகிறது. 11 பொதுத்துறை வங்கிகள், 12 தனியார் வங்கிகள், ஒரு சிறு நிதி வங்கி ஆகியவை இதில் பங்கேற்கின்றன.

  இதையும் படிங்க: இந்தியாவின் பிம்பத்தை வேண்டுமென்றே சீர்குலைக்க நோக்கம்.. உலக பசி குறியீடு பட்டியலை நிராகரித்த மத்திய அரசு!

  சேமிப்பு கணக்குகளை தொடங்குவது, வங்கி கணக்கில் இருப்பை சரிபார்ப்பது, பாஸ்புக்கில் பதிவு செய்வது, நிதி மாற்றம், வைப்பு தொகை முதலீடு, கடன் விண்ணப்பங்கள், காசோலைகளுக்கு பணம் செலுத்துவதை நிறுத்தி வைப்பதற்கான அறிவுறுத்தல்கள், கிரெடிட் மற்றும் டெபிட் அட்டைகளுக்கு விண்ணப்பித்தல், வங்கி கணக்கு விவரத்தை காணுதல், வரி, கட்டணங்கள் செலுத்துதல், வாரிசுதாரர் நியமனம் போன்ற பல்வேறு டிஜிட்டல் வங்கி வசதிகளை மக்களுக்கு வழங்கும் நிலையங்களாக இந்த அலகுகள் செயல்படும்.

  Published by:Kannan V
  First published:

  Tags: Banking, Digital India, PM Modi