பிரதமர் நரேந்திர மோடியின் சொத்து மதிப்பு விவரம் வெளியீடு

தன்னிடம் சொந்தமாக கார் மற்றும் இருசக்கர வாகனம் இல்லை என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். 

பிரதமர் நரேந்திர மோடியின் சொத்து மதிப்பு விவரம் வெளியீடு
பிரதமர் மோடி
  • Share this:
பிரதமர் நரேந்திர மோடியின் சொத்து மதிப்பு கடந்த ஓராண்டில் 36 லட்சம் ரூபாய் அதிகரித்துள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி தனது சொத்து விவரங்களை தாமாக முன்வந்து வெளியிட்டுள்ளார். அதன்படி பிரதமர் மோடியின் மொத்த சொத்து மதிப்பு கடந்த ஜூன் 30 ஆம் தேதிப்படி 2 கோடியே 85 லட்சம் ரூபாயாக அதிகரித்துள்ளது.  2019 நாடாளுமன்ற தேர்தலின் போது, பிரதமரின் சொத்து மதிப்பு 2 கோடியே 49 லட்சம் ரூபாயாக இருந்த நிலையில், தற்போது 36 லட்சம் ரூபாய் அதிகரித்துள்ளது.

ஜூன் 30 ஆம் தேதி பிரதமரின் கையில் ரொக்கமாக இருந்த தொகை 31 ஆயிரத்து 450 ரூபாய் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2019ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதி வங்கிக்கணக்கில் 4 ஆயிரத்து 143 ரூபாய் இருந்த நிலையில், கடந்த ஜூன் 30ஆம் தேதி வங்கிக்கணக்கில் உள்ள தொகை 3 லட்சத்து 38 ஆயிரம் ரூபாயாக அதிகரித்துள்ளது.


ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் காந்தி நகர் கிளையில் கடந்த ஆண்டு ஒரு கோடியே 27 லட்சம் ரூபாய் நிரந்தர வைப்புத்தொகை இருந்த நிலையில், தற்போது அது ஒரு கோடியே 60 லட்சமாக அதிகரித்துள்ளது.  பிரதமர் தன்னிடம் 4 தங்க மோதிரங்கள் உள்ளதாகவும், அவற்றின் மொத்த எடை 45 கிராம் என்றும, அவற்றின் மதிப்பு ஒரு லட்சத்து 51 ஆயிரம் ரூபாய் என்றும் தெரிவித்துள்ளார்.

காந்தி நகரில் ஒரு கோடியே 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வீட்டின் சொத்தில் பங்கு தாரராகவும் உள்ளார். தன்னிடம் சொந்தமாக கார் மற்றும் இருசக்கர வாகனம் இல்லை என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார்.  இதேபோல் அமித்ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட மத்திய அமைச்சர்களும் தங்கள் சொத்து விவரங்களை வெளியிட்டுள்ளதாக பிரதமர் அலுவலகம் கூறியுள்ளது.

ஐபிஎல் போட்டிகள் குறித்த செய்திகளுக்கு நியூஸ்18 உடன் இணைந்திருங்கள்
First published: October 15, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading