குடிமக்களுக்கு தூய்மையான நீரை வழங்கிட பிரதமர் மோடி புதிதாக ‘ஜல் சக்தி’ என்றதொரு புதிய அமைச்சகத்தை உருவாக்கியுள்ளார்.
கடந்த ஆண்டு அமைச்சரவையில் இடைக்கால பட்ஜெட்டின் போது அறிவித்ததன் அடிப்படையிலும் பாஜக-வின் முக்கியத் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றும் ஆன ‘ஜல் சக்தி’ என்னும் அமைச்சகத்தை பிரதமர் மோடி நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
இந்த அமைச்சகத்தின் பொறுப்பு முழுவதுமாக ராஜஸ்தானின் ஜோத்பூர் எம்.பி., கஜேந்திர சிங் செகாவத்திடம் வழங்கப்பட்டுள்ளது.
குடிமக்களுக்குத் தூய்மையான குடிநீர் வழங்கப்படுவதை உறுதி செய்யவே இந்த அமைச்சகம் உருவாக்கப்பட்டுள்ளது.
கடந்த அரசில் கங்கை நதியை தூய்மையாக்க தனி அமைச்சகம் உருவாக்கப்பட்ட நிலையில், தற்போது ஜல் சக்தி அமைச்சகத்துடன் பழைய அமைச்சகம் இணைக்கப்பட்டுள்ளது.
மேலும் பார்க்க: ராஜஸ்தானில் உருவாகும் 351 அடி உயர சிவன் சிலை!
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Modi Cabinet