Home /News /national /

பாரதியார் பாட்டை பாடிய அருணாச்சல் சிறுமிகள்... தமிழில் பாராட்டிய பிரதமர் மோடி

பாரதியார் பாட்டை பாடிய அருணாச்சல் சிறுமிகள்... தமிழில் பாராட்டிய பிரதமர் மோடி

பிரதமர் மோடி

பிரதமர் மோடி

ஒரே இந்தியா உன்னத இந்தியா கோட்பாட்டை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்லும் வகையில் தமிழில் பாடியுள்ள அருணாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் சக்தியின் நட்சத்திரங்களுக்கு எனது பாராட்டுக்கள் - பிரதமர் மோடி

    பாரதியாரின்  பாருக்குள்ளே நல்ல நாடு என்னும் பாடலை பாடிய அருணாச்சல பிரதேசத்தை சேர்ந்த சிறுமிகளை பிரதமர் மோடி தமிழில் பாராட்டியுள்ளார். இந்த வீடியோவை கண்டபோது கண்டபோது பெருமகிழ்ச்சியும் உவகையும் கொண்டதாக அவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

    தமிழின் மாபெரும்  கவிஞராக பாரதியார் திகழ்கிறார். தேச விடுதலை, பெண் உரிமை தொடர்பாக பல்வேறு பாடல்களை பாடியுள்ள பாரதியார் தேச ஒருமைப்பாடு தொடர்பான பாடல்களையும் பாடியுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி, மகாகவி பாரதியார் நினைவு நூற்றாண்டை ஒட்டி சுப்ரமணிய பாரதியார் பெயரில் பனாரஸ் பல்கலைக்காகத்தில் தமிழ் ஆய்வு இருக்கை அமைக்கப்படும் என்று அறிவித்திருந்தார். இதேபோல் தனது பேச்சுகளிலும் பாரதியார் குறித்து பலமுறை மோடி குறிப்பிட்டுள்ளார்.

    இந்நிலையில், அருணாச்சல பிரதேசத்தின் முதல்வர் பிரேம கண்டு பதிவிட்டுள்ள வீடியோ ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடி ரி-ட்விட் செய்துள்ளார்.  அந்த வீடியோவில் அருணாச்சல் பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு சிறுமிகள், மகாகவி சுப்பிரமணிய பாரதியின் பாருக்குள்ளே நல்ல நாடு எங்கள் பாரத நாடு என்னும் பாடலை பாடியுள்ளனர்.



    இதனை பாராட்டி பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவியில், இதைக் கண்டபோது நான் பெருமகிழ்ச்சியும் உவகையும் கொண்டேன். ஒரே இந்தியா உன்னத இந்தியா கோட்பாட்டை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்லும் வகையில் தமிழில் பாடியுள்ள அருணாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் சக்தியின் நட்சத்திரங்களுக்கு எனது பாராட்டுக்கள்’ என குறிப்பிட்டுள்ளார்.
    Published by:Murugesh M
    First published:

    Tags: Mahakavi Bharathiyar, PM Modi

    அடுத்த செய்தி