முகப்பு /செய்தி /இந்தியா / நாட்டுக்கு பெருமை : ஆஸ்கர் விருதுபெற்றவர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு

நாட்டுக்கு பெருமை : ஆஸ்கர் விருதுபெற்றவர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு

பிரதமர் மோடி வாழ்த்து

பிரதமர் மோடி வாழ்த்து

ஆஸ்கர் பெற்ற The Elephant Whisperers என்ற ஆவணப்படம் மற்றும் ஆர்.ஆர்.ஆர் படத்தின் நாட்டு நாட்டுப் பாடலுக்குப் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • New Delhi, India

95வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறுகிறது. இந்த விருதில் சிறந்த ஒரிஜினல் பாடலுக்கு இந்தியத் திரைப்படமான ஆர்.ஆர்.ஆர் படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டுப் பாடல் மற்றும் சிறந்த ஆவணப்படமாக இந்தியத் தயாரிப்பில் வெளியாக The Elephant Whisperers என்ற ஆவணப்படமும் ஆஸ்கர் விருதை பெற்றுள்ளனர்.

இதனைத்தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி ஆஸ்கர் வென்ற இரண்டு குழுக்களுக்கும் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். The Elephant Whisperers என்ற ஆவணப்படம், ”இயற்கையின் முக்கியத்துவம் மற்றும் இயற்கையுடன் இணைந்து வாழ்வதை எடுத்துரைத்துள்ளது” என்று கூறியுள்ளார். தொடர்ந்து, ”நாட்டு நாட்டுப் பாடல் உலகளவில் பிரபலமாக உள்ளது, ஆண்டாண்டுகளுக்கு நினைவில் உள்ள பாடலாக இருக்கும்” என்று கூறியுள்ளார்.

Also Read : சாப்பிடும்போது தொண்டையில் சிக்கிய பரோட்டா... பெண் பரிதாப பலி... அதிர்ச்சி சம்பவம்..!

மேலும், படத்தின் இசையமைப்பாளர் எம்.எம். கீரவாணி, பாடலாசிரியர் சந்திரபோஸ் ஆகியோர் மற்றும் படக்குழுவிற்கு வாழ்த்து தெரிவித்து, ”ஆஸ்கர்கள் இந்தியாவிற்கும் உற்சாகமும் பெருமையும்” என்று கூறியுள்ளார்.

First published:

Tags: Oscar Awards, PM Modi