ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, அவரின் மறைவுக்கு இந்தியாவில் ஒரு நாள் தேசிய துக்கம் அனுசரிக்கப்படும் என அறிவித்துள்ளார்.
பிரதமர் மோடி தனது இரங்கல் செய்தியில், "என்னுடைய மிக நெருங்கிய நண்பர் ஷின்சோ அபேவின் எதிர்பாராத மறைவு எனக்கு பேர் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனது துயரை பகிர்ந்துகொள்ள வார்த்தைகள் இல்லை. தலைசிறந்த நிர்வாகியும், பெருந்தன்மை மிக்க தலைவருமான ஷின்சோ அபே, தனது வாழ்நாளை ஜப்பானின் முன்னேற்றத்திற்காகவே அர்ப்பணித்தவர். ஷின்சோ அபேவுக்கும் எனக்குமான தொடர்பு பல ஆண்டு முன்னரே ஏற்பட்டது.
நான் குஜராத்தின் முதலமைச்சராக இருந்த காலத்திலேயே ஜப்பான் பிரதமராக இருந்த அவர் என்னோடு நட்போடு பழகி வருகிறார். பொருளாதாரம், உலக அரசியல் போன்றவற்றில் ஆழ்ந்த ஞானம் கொண்ட அவர்,என்னிடம் ஆழமான நட்பை கொண்டவர்.
இதையும் படிங்க:
துப்பாக்கியால் சுடப்பட்ட ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே மரணம்.. உலக நாடுகள் அதிர்ச்சி..
அன்மையில் எனது ஜப்பான் பயணத்தின் போது கூட ஷின்சோ அபேவை சந்தித்து பேசி நீண்ட உரையாடலை மேற்கொண்டேன். அதுவே கடைசி சந்திப்பாக இருக்கும் என நான் நினைத்துப் பார்க்கவில்லை. அவரின் குடும்பத்தினருக்கும் ஜப்பான் மக்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். இந்தியா-ஜப்பான் உறவில் பெரும் பங்காற்றிய அவருக்காக ஒட்டுமொத்த இந்தியாவே துயரத்தில் ஆழ்ந்துள்ளது. அவரின் மறைவை அடுத்து இந்தியாவில் நாளை ஒரு நாள் தேசிய துக்கம் அனுசரிக்கப்படும்.'" இவ்வாறு பிரதமர் மோடி தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.