ஹோம் /நியூஸ் /இந்தியா /

"பயங்கரவாதம் உலகளாவிய அச்சுறுத்தல்": ஜி-20 மாநாட்டில் மோடி உரை

"பயங்கரவாதம் உலகளாவிய அச்சுறுத்தல்": ஜி-20 மாநாட்டில் மோடி உரை

ஜப்பான், அமெரிக்கா, இந்தியா தலைவர்கள்

ஜப்பான், அமெரிக்கா, இந்தியா தலைவர்கள்

ஜப்பான், அமெரிக்கா, இந்தியா என்ற 3 நாடுகளின் பெயர்களின் முதல் எழுத்துக்களை சேர்த்து JAI என்ற பெயரில் இந்த சந்திப்பு நடைபெற்றதாகவும், ஜெய் என்றால் வெற்றி என்று மோடி கூறியுள்ளார்.

  • News18
  • 2 minute read
  • Last Updated :

பயங்கரவாதம் உலக நாடுகளின் பாதுகாப்பிற்கும், அமைதிக்கும் பெரும் அச்சறுத்தலாகியுள்ளதாக ஜி-20 மாநாட்டில் பிரதமர் மோடி பேசியுள்ளார். 

அமெரிக்கா, சீனா, இங்கிலாந்து, ஜெர்மனி, கனடா, ஜப்பான், இந்தியா மற்றும் அர்ஜென்டினா உள்ளிட்ட உலகின் 19 பொருளாதார வல்லரசு நாடுகள் மற்றும் ஐரோப்பிய யூனியன் ஆகியவற்றின் தலைவர்கள் பங்கேற்ற ஜி-20 மாநாடு, அர்ஜென்டினா தலைநகர் பியூனஸ் அய்ரஸில் நடைபெற்றது.

மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் மோடி, உலக நாடுகளின் அச்சுறுத்தலை ஏற்படுத்தும், பயங்கரவாதத்திற்கு சிலர் நிதியுதவி செய்தவன் மூலம் உலகின் அமைதிக்கு அவர்களும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளதாக கூறினார்.

மேலும் கூட்டத்தில் உலகளாவிய பொருளாதார வளர்ச்சி, நிலையான முன்னேற்றம் மற்றும் பருவநிலை மாற்றம் உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து தலைவர் ஆலோசனை மேற்கொண்டனர்.

மாநாட்டின் போது, சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் மோடி ஆலோசனை நடத்தினார். அதன் பிறகு அமெரிக்க அதிபர் டிரம்ப், ஜப்பான் அதிபர் ஷின்ஜோ அபே ஆகியோரை சந்தித்து பேசினார். கூட்டத்திற்கு பிறகு 3 தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது பேசிய மோடி, ஜப்பான், அமெரிக்கா, இந்தியா என்ற 3 நாடுகளின் பெயர்களின் முதல் எழுத்துக்களை சேர்த்து JAI என்ற பெயரில் இந்த சந்திப்பு நடைபெற்றதாகவும், ஜனநாயக விழுமியங்கள் குறித்து ஆலோசைன மேற்கொண்டதாகவும் கூறினார். ஜெய் என்றால் வெற்றி என்ற மோடி, இந்த கூட்டணி வெற்றிக் கூட்டணி என்றும் கூறினார்.

அதனைத் தொடர்ந்து 2 தலைவர்களிடமும் இந்திய-பசிபிக் நாடுகளின் வளர்ச்சி குறித்து புதிய திட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தியதாக வெளியுறவு செயலர் விஜய் கோக்லே கூறினார். தொடர்ந்து பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்களையும் மோடி சந்தித்து பேசினார்.

Also see... ‘குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம்’ நடிகை ரியாமிகா தூக்கிட்டு தற்கொலை

Published by:Vaijayanthi S
First published:

Tags: Donald Trump, PM Modi, Shinzo Abe