கோடை வெப்பத்தை சமாளிப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி, டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் நேற்று ஆலோசனை நடத்தினார். அப்போது, அடுத்த சில மாதங்களுக்கான வானிலை நிலவரங்கள் குறித்து இந்திய வானிலை மைய அதிகாரிகள் எடுத்துரைத்தனர். குடிநீர் விநியோகம் உள்ளிட்டவற்றுக்கான நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வுசெய்யப்பட்டது.
இதையும் படிங்க; “ஒரு உலகம், ஒரே சுகாதாரம்” - பிரதமர் மோடியின் புதிய முழக்கம்
அப்போது பேசிய பிரதமர், குடிமக்கள், மருத்துவ வல்லுநர்கள், உள்ளாட்சி அமைப்பினர், தீயணைப்புத் துறையினர் போன்ற பேரிடர் மேலாண்மைக் குழுவினர் ஆகியோருக்கு தனித்தனியாக விழிப்புணர்வு ஆவணங்களை தயார்செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
கடுமையான வெப்பத்தை எதிர்கொள்வது குறித்து குழந்தைகள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வகுப்புகளை நடத்த வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். எளிதில் புரிந்துகொள்ளும் வகையில், தினசரி வானிலை நிலவரங்களை வெளியிட வேண்டும் என்று பிரதமர் அறிவுறுத்தினார்.
மேலும், தொலைக்காட்சிகள், பண்பலை வானொலிகள் மூலம் தினசரி வானிலை நிலவரங்களை விளக்க வேண்டும் என்றும், மருத்துவமனைகளில் தீத்தடுப்பு நடவடிக்கைகளை விரிவாக ஆய்வுசெய்ய வேண்டும் என்றும் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டார். காட்டுத் தீயைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுப்பதுடன், கால்நடைத் தீவனங்கள் மற்றும் நீர்நிலைகளில் நீர் இருப்பு ஆகியவற்றை கண்காணிக்க வேண்டும் என்றும், போதிய அளவில் உணவு தானியங்களை இந்திய உணவுக் கழகம் சேமித்து வைக்க வேண்டும் என்றும் பிரதமர் அறிவுறுத்தினார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: PM Modi, Summer Heat