Home /News /national /

ஒரு தேசம் ஒரே தேர்தல், ஒரு நாடு ஒரே வாக்காளர் பட்டியல் - பிரதமர் நரேந்திர மோடி திட்டம்

ஒரு தேசம் ஒரே தேர்தல், ஒரு நாடு ஒரே வாக்காளர் பட்டியல் - பிரதமர் நரேந்திர மோடி திட்டம்

பிரதமர் மோடி

பிரதமர் மோடி

தேர்தல்கலில் குறைந்த வாக்கு சதவீதம் பதிவாவது குறித்து கவலை தெரிவித்தார்பிரதமர் நரேந்திர மோடி. குறிப்பாக நகர்ப்புறங்களில் படித்தவர்கள் மற்றும் வளமானவர்கள் இருக்கும் பகுதிகளில் குறைந்த வாக்குப்பதிவு என்ற நிலை இந்தியா போன்ற துடிப்பான ஜனநாயகத்தில் மாற வேண்டும் என்று கூறினார்.

மேலும் படிக்கவும் ...
    தேர்தல்கலில் குறைந்த வாக்கு சதவீதம் பதிவாவது குறித்து கவலை தெரிவித்தார்பிரதமர் நரேந்திர மோடி. குறிப்பாக நகர்ப்புறங்களில் படித்தவர்கள் மற்றும் வளமானவர்கள் இருக்கும் பகுதிகளில் குறைந்த வாக்குப்பதிவு என்ற நிலை இந்தியா போன்ற துடிப்பான ஜனநாயகத்தில் மாற வேண்டும் என்று கூறினார்.

    நாடு முழுவதும் உள்ள பாஜக தொண்டர்களுடனான உரையாடலில் பிரதமர் மோடி, "ஒரு நாடு, ஒரே தேர்தல்" மற்றும் "ஒரு நாடு, ஒரு வாக்காளர் பட்டியல்" ஆகியவை பற்றியும் எழுப்பினார், தொடர்ச்சியான தேர்தல் சுழற்சியின் விளைவாக எல்லாவற்றிலும் அரசியல் காணப்படுகிறது இதனால் வளர்ச்சி பணிகள் பாதிக்கப்படும் என்று கூறினார் மோடி.

    அவரது உரை செவ்வாயான இன்று தேசிய வாக்காளர் தினத்தன்று நிகழ்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. 1951-52-ல் நடந்த முதல் லோக்சபா தேர்தலில் 45% ஆக இருந்த வாக்கு சதவீதம் 2019 இல் 67% ஆக உயர்ந்தது என்று குறிப்பிட்ட அவர், பெண் வாக்காளர்கள் பங்கேற்பு அதிகரிப்பு ஒரு நல்ல விஷயம் என்று கூறினார், ஆனால் குடிமக்கள் முதல் வெவ்வேறு அரசியல் உறுப்பினர்கள் வரை அனைவரும் இந்த குறைந்த வாக்குப்பதிவு குறித்து சிந்திக்க வேண்டும் என்றார்.

    படித்த மற்றும் வளமான பகுதிகளாகக் கருதப்படும் நகர்ப்புறங்களில் குறைந்த வாக்குப்பதிவுதான் உள்ளது, இவர்கள் சமூக ஊடகங்களில் தேர்தல் பற்றி விவாதிக்கிறார்கள் ஆனால் வாக்களிக்க செல்வதில்லை என்று மோடி வேதனை தெரிவித்தார். ஆகவே எந்த ஒரு தேர்தலாக இருந்தாலும் 75% மக்கள் வாக்களிப்பதை உறுதி செய்யுமாறு தொண்டர்களை வலியுறுத்தினார்.

    ஜனநாயகத்தை வலுப்படுத்த வாக்குப்பதிவு மிகவும் புனிதமான நன்கொடையாகும், வாக்குப்பதிவை அதிகரிக்க தேர்தல் ஆணையத்தின் பல முயற்சிகளுக்கு பிரதமர் பாராட்டு தெரிவித்தார்.

    வாக்காளர்கள் ஆதார் எண் மற்றும் வாக்காளர் அடையாள அட்டையை இணைக்க வேண்டும் என்று சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தை குறிப்பிட்டு, இது வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கும் என்றார்.

    "ஒரு தேசம், ஒரே தேர்தல்" மற்றும் "ஒரு நாடு, ஒரு வாக்காளர் பட்டியல்" என்ற விவாதத்திற்கு அழுத்தம் கொடுத்த அவர், வெவ்வேறு கருத்துக்கள் வெளிவரட்டும் என்றார். மேலும், மோடி தனது உரையில், சுதந்திரத்தின் நூற்றாண்டு ஆண்டான 2047-க்குள் ஆரோக்கியமான இந்தியா உருவாகும் வகையில் ஊட்டச்சத்துக் குறைபாட்டிற்கு எதிராக மக்கள் பங்கேற்புடன் பிரச்சாரம் செய்யுமாறு பாஜக ஊழியர்களை வலியுறுத்தினார்.
    Published by:Muthukumar
    First published:

    Tags: PM Narendra Modi

    அடுத்த செய்தி