Home /News /national /

கிரிப்டோகரன்ஸிக்கு கட்டுப்பாடு அவசியம்... உலக நாடுகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தல்

கிரிப்டோகரன்ஸிக்கு கட்டுப்பாடு அவசியம்... உலக நாடுகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தல்

கிரிப்டோகரன்ஸி மற்றும் சமூக ஊடகங்களின் பயன்பாடுகளை ஒழுங்குபடுத்த சர்வதேச அளவில் விதிமுறைகளை வகுக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தி உள்ளார்.

    அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஏற்பாடு செய்திருந்த ஜனநாயக உச்சிமாநாட்டில் காணொலி காட்சி வாயிலாக பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது பேசிய அவர், ஜனநாயக நாடுகள் தொடர்ச்சியாக ஜனநாயக நடைமுறைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் வெளிப்படைத்தன்மை, கண்ணியம், அதிகரத்தை பகிர்ந்தளிப்பது ஆகியவற்றை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

    Also Read : மகாராஷ்டிராவை அச்சுறுத்தும் ஒமைக்ரான் வைரஸ்... 17 பேருக்கு தொற்று உறுதி

    இந்திய நாகரீக பண்பாட்டிலேயே ஜனநாயகம் ஒருங்கிணைந்துள்ளதாகவும், 200 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சி செய்த ஆங்கிலேயர்களால் இந்திய மக்களிடம் இருந்து ஜனநாயக உணர்வை அழிக்க முடியவில்லை என்றும் பெருமிதம் தெரிவித்தார். 2500 ஆண்டுகளுக்கு முன்பு கங்கை நதிக்கரையோரம் இருந்த லிச்சாவி, சாக்யா நகரங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட குடியரசு ஆட்சி இருந்ததாகவும், 10ம் நூற்றாண்டை சேர்ந்த உத்திரமேரூர் கல்வெட்டுகளில் ஜனநாயக நடைமுறைகள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

    இந்தியாவில் நிர்வாகத்தின் அனைத்து துறைகளும் வெளிப்படையாக செயல்படுவதாகவும், சுதந்திரமான, நியாயமான முறையில் தேர்தல் நடத்தப்படுவதாகவும் அவர் மகிழ்ச்சி தெரிவித்தார்.  தற்போது வளர்ந்து வரும் சமூக ஊடகங்கள் மற்றும் கிரிப்டோகரன்சி பயன்பாடுகளை ஒழுங்குபடுத்த சர்வதேச அளவில் விதிமுறைகளை உருவாக்க வேண்டும் என்றும், இதன்மூலம் ஜனநாயகத்தை வலுப்படுத்தும் கருவியாக அவற்றை மாற்ற முடியும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
    Published by:Vijay R
    First published:

    Tags: Cryptocurrency

    அடுத்த செய்தி