சீன விவகாரம்... பிரதமர் மோடி தலைமையில் நடக்கும் கூட்டத்துக்கு அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு...

பிரதமர் மோடி

எல்லை பிரச்சனை விவகாரம் தொடர்பாக அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்துகிறார்.

 • Share this:
  லடாக் எல்லையில் சீனா படையினருடன் ஏற்பட்ட மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணமடைந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  லடாக் எல்லை களநிலவரம் பற்றி நாட்டு மக்களுக்கு விளக்கமளிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன.

  இதனையேற்று அனைத்து கட்சி கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. இதுதொடர்பாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், காங்கிரஸ், திமுக, தெலுங்கு தேசம், தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள், பிகார், ஒடிசா மற்றும் மேற்கு வங்க முதலமைச்சர்கள் உட்பட 15 க்கும் மேற்பட்ட தலைவர்களுடன் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு கூட்டத்தில் பங்கேற்கும்படி அழைப்பு விடுத்தார்.

  Also read... நகைக்கடை உரிமையாளரை தாக்கி துப்பாக்கி முனையில் கொள்ளை... கொள்ளையர்கள் சிக்கியது எப்படி?

  பிரதமர் மோடி தலைமையில் மாலை 5 மணிக்கு நடைபெறும் கூட்டத்தில் திமுக தரப்பில் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார். இந்த கூட்டத்தில் ஆம் ஆத்மி கட்சிக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

  நாடாளுமன்றத்தில் 5 உறுப்பினர்களுக்கு மேல் கொண்ட கட்சிகளுக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
  Published by:Vinothini Aandisamy
  First published: