பிரதமர் மோடியின் இளம்படை... யார் யாருக்கு என்ன வயது...புதிய அமைச்சரவையின் சுவாரசிய தகவல்

பிரதமர் மோடியின் இளம்படை

65 வயதுக்கு மேற்பட்ட 5 பேர் மட்டுமே அமைச்சரவையில் இடம்பிடித்துள்ளனர்.மேலும் 70 வயதுக்கு மேல் ஒருவர் கூட இல்லை என்பது கூடுதல் சிறப்பம்சமாகும்

 • Share this:
  மத்தியில் மாற்றியமைக்கப்பட்ட புதிய அமைச்சரவையானது இதுவரை இல்லாத வகையில் மிக இளம் வயதினரை கொண்டுள்ளது. கடந்த அமைச்சரவையில் இருந்து ராஜினாமா செய்த 12 பேரில் மிகக்குறைந்த அமைச்சரின் வயது 50 ஆகவும், மிக அதிக வயதுள்ள உறுப்பினரின் வயது 73 ஆகவும் இருந்தது.
  புதிதாக மாற்றியமைக்கப்பட்டுள்ள இளம் அமைச்சரவையில் உறுப்பினர்களின் சராசரி வயது 56 ஆக உள்ளது.

  36 புதிய அமைச்சர்களில் மிகக்குறைந்த வயதாக 35 வயதான நிஷித் பிரமானிக்குக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. நிஷித் பிரமானிக்குக்கு அடுத்தபடியாக 38 வயதான ஷாந்தனு தாகூருக்கும் அமைச்சரவையில் இடம் கிடைத்துள்ளது. 40 வயதான அனுபிரியா படேல், 42 வயதான பாரதி பிரவீன் பவார், 44 வயதான தமிழக பாஜக தலைவராக இருந்த எல்.முருகன், 45 வயதான ஜான் பிர்லாவுக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.70 வயதாகும் மோடிக்கு அடுத்தபடியாக மிக அதிக வயதுள்ள அமைச்சராக 69 வயது நாராயண் ரானே அமைச்சரவையில் இடம்பிடித்துள்ளார்.

  65 வயதுக்கு மேற்பட்ட 5 பேர் மட்டுமே அமைச்சரவையில் இடம்பிடித்துள்ளனர். மேலும் 70 வயதுக்கு மேல் ஒருவர் கூட இல்லை என்பது கூடுதல் சிறப்பம்சமாகும். புதிய அமைச்சரவையில் இடம்பிடித்தவர்களில் பல்வேறு துறை சார்ந்தோருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.  அதன்படி 13 பேர் வழக்கறிஞர்களாகவும், 7 பேர் குடிமைப் பணியில் இருந்தவர்கள். 6 பேர் மருத்துவர்கள், முனைவர் பட்டம் பெற்றோர் 7 பேரும் பொறியாளர்கள் 5 பேரும், முதுநிலை மேலாண்மை படிப்பு படித்த 3 பேரும் என மொத்தம் 41 பேர் இடம்பிடித்துள்ளனர்.

  பிரதமரின் "இளம் அமைச்சரவை"

  ராஜினாமா செய்த 12 பேரில் மிகக்குறைந்த வயது 50, அதிக வயது 73.புதிய அமைச்சரவையில் உறுப்பினர்களின் சராசரி வயது 56. புதிய அமைச்சர்களில் மிக குறைந்த வயது -நிஷித் பிரமானி (வயது 35).  ஷாந்தனு தாகூர் 38
   அனுபிரியா படேல் 40
   அனுபிரியா படேல் 42
  எல்.முருகன் 44
   ஜான் பிர்லா 45

  மோடிக்கு அடுத்தபடியாக அதிக வயதான நாராயண் ரானேவுக்கு அமைச்சரவையில் இடம். 65 வயதுக்கு மேற்பட்ட 5 பேர் மட்டுமே உள்ளனர். புதிய அமைச்சரவையில் ஒருவர் கூட 70+ வயதில் இல்லை   

  வழக்கறிஞர்கள் அதிகம்

   

  வழக்கறிஞர்கள்
  13
   குடிமைப் பணியில் இருந்தோர் 7
  முனைவர் பட்டம் பெற்றோர் 7
  மருத்துவர்கள் 6
   எம்.பி.ஏ. பட்டதாரிகள் 3
  பொறியாளர்கள் 5

   

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Sankaravadivoo G
  First published: