ஹோம் /நியூஸ் /இந்தியா /

காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் பிரிவு உபசார விழா: ‘உண்மையான நண்பர்’ ஆசாதுக்காக கண்கலங்கி பிரியாவிடை அளித்த பிரதமர் மோடி

காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் பிரிவு உபசார விழா: ‘உண்மையான நண்பர்’ ஆசாதுக்காக கண்கலங்கி பிரியாவிடை அளித்த பிரதமர் மோடி

பிரதமர் மோடி.

பிரதமர் மோடி.

குலாம் நபியின் அன்பு, அமைதி, உழைக்கும் வேட்கை ஆகியவை அவரை எப்போதும் உயிர்ப்புடன் வைத்துள்ளது, அவர் எது செய்தாலும் அதற்கு ஒரு கூடுதல் மதிப்பை கூட்டுவார். பதவிகள் வரும். அதிகாரம் வரும் ஆனால் அவற்றை எப்படிக் கையாள வேண்டும் என்பதை ஆசாத் ஜியிடம் கற்று கொள்ள வேண்டும்.

மேலும் படிக்கவும் ...
 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான குலாம் நபி ஆசாத், கட்சிக்காக மட்டும் அல்லாமல் நாட்டிற்காக கவலைப்பட்டவர் என அவரது பிரிவு உபசார விழாவில் மாநிலங்களவையில் நடந்த உரையில் பிரதமர் மோடி உணர்ச்சிவசப்பட்டு கண் கலங்கினார்.

  காஷ்மீரை சேர்ந்த காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், அக்கட்சியின் மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவராக பதவி வகித்து வருகிறார். இவரது பதவி காலம் வரும் 15ல் முடிவுக்கு வருகிறது.

  காஷ்மீர் யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்ட பின்னர், சட்டமன்றத் தேர்தல் நடத்தப்படவில்லை. எனவே குலாம் நபி சுாத் மீண்டும் மாநிலங்களவை எம்.பி.,யாக அங்கிருந்து தேர்வாக வாய்ப்பில்லை.

  இந்த நிலையில்தான் மாநிலங்களவையில் ஓய்வு பெறும் எம்.பி.க்களுக்கான பிரிவு உபசார விழா நடந்தது.

  அப்போது குலாம் நபி ஆசாத்தை பாராட்டி உருக்கமாகப் பிரதமர் மோடி பேசினார்.

  “குலாம் நபி ஆசாத்தை உண்மையான நண்பனாக கருதுகிறேன். அவரது கட்சிக்காக மட்டும் அல்லாமல், நாட்டிற்காகவும், இந்த அவைக்காகவும் கவலைப்பட்டவர்.

  அவரது இடத்திற்கு வரும் புதிய தலைவரால், குலாம் நபியின் பணியை நிரப்ப முடியாது. இவர் அவையை விட்டு போனாலும் அவரது அறிவுரகைள் , கருத்துக்கள் என்றும் தேவைப்படும். அவருக்கு நான் தலைவணங்குகிறேன்.

  அவரை ஓய்வு பெற விடமாட்டோம், அவரிடமிருந்து ஆலோசனைகளைப் பெறுவோம். குலாம் நபி ஆசாதுக்காக என் கதவுகள் எப்போதும் திறந்திருக்கும். தொடர்ந்து அவரிடமிருந்து ஆலோசனைகளைப் பெறுவோம்.

  மேலும் " ஆசாத் சல்யூட் " என நெற்றியில் கை வைத்து அடித்து காட்டினார். இந்நேரத்தில் அவையில் உறுப்பினர்கள் பலரும் உணர்ச்சிப்பூர்வமாக காணப்பட்டனர்.

  மோடி பேசும் போது, ஜம்மு காஷ்மீரில் ஒருமுறை குஜராத் யாத்திரிகர்கள் மீது பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்ட போது குலாம் நபி ஆசாத் தனனி அழைத்து ஆசாத் விஷயத்தைச் சொன்னார் என்றும். அந்தச் சம்பவத்தில் பலியானோர் உடல்களை எடுத்து செல்வதற்காக தனக்கு இருமுறை ஆசாத் அழைத்ததையும் கண்கலங்க மோடி குறிப்பிட்டார்.

  ஒவ்வொருவரையும் குலாம் நபி ஆசாத் தன் குடும்ப உறுப்பினர்கள் போல்தான் கவனித்துக் கொள்வார் என்றார் மோடி.

  குலாம் நபியின் அன்பு, அமைதி, உழைக்கும் வேட்கை ஆகியவை அவரை எப்போதும் உயிர்ப்புடன் வைத்துள்ளது, அவர் எது செய்தாலும் அதற்கு ஒரு கூடுதல் மதிப்பை கூட்டுவார். பதவிகள் வரும். அதிகாரம் வரும் ஆனால் அவற்றை எப்படிக் கையாள வேண்டும் என்பதை ஆசாத் ஜியிடம் கற்று கொள்ள வேண்டும். நான் அவரை என் உண்மையான நண்பனாகக் கருதுகிறேன் என்று உருக்கமாக பேசினார் பிரதமர் மோடி.

  Published by:Muthukumar
  First published:

  Tags: PM Modi